பாகிஸ்தான் தலைநகரில் காதலர் தினத்திற்கு தடை

பாகிஸ்தானில் உள்ள நீதிமன்றம் ஒன்று, தலைநகர் இஸ்லாமாபாத்தில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளது; காதலர் தினம் முஸ்லிம் கலாசாரத்தில் இல்லை என்ற அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

பொது இடங்களில் உடனடியாக, காதலர் தினம் தொடர்பான அனைத்து விழாக்களையும், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தடை செய்துள்ளது.

மேலும் ஊடகங்கள் காதலர் தின நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கவோ, ஒளிபரப்பவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.

காதலர் தினம், இஸ்லாமிய போதனைகளுக்கு எதிரானது என தொடரப்பட்ட தனியார் மனுவின் மீது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் காதலர் தினம் மேற்கத்திய கலாசாரம் என்றும் அது பாகிஸ்தான் கலாசாரத்தை சேர்ந்தது அல்ல என்றும் பாகிஸ்தானிய அதிபர் மம்னூன் ஹுசேன் தெரிவித்திருந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்