பாகிஸ்தானில் தாலிபனின் ஒரு பிரிவினர் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொலை

பாகிஸ்தானில் உள்ள லாகூரின் கிழக்குப் பகுதியில் நிகழ்ந்த குண்டுத் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

மருந்துகள் விற்பனை குறித்து அரசாங்கத்தின் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த கூட்டத்திற்குள் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு நபர் தனது வாகனத்தை செலுத்தி பின் வெடிகுண்டை வெடிக்க வைத்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த தாக்குதலில் 40 காயம் அடைந்துள்ளனர்.

தாலிபன் அமைப்பின் ஒரு பிரிவு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்