டிரம்ப் நியமித்த மைக்கேல் பிளின் தேசிய ஆலோசகராக நீடிப்பாரா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமித்த மைக்கேல் பிளின் பற்றி டிரம்பின் நிர்வாகம் வெளியிடும் முரண்பட்ட தகவல்கள், அவரது எதிர்காலம் குறித்த யூகங்களை எழுப்பி வருகின்றன.

படத்தின் காப்புரிமை EPA
Image caption அதிபர் டிரம்ப், மைக்கேல் பிளின் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தார் - கெல்லியானே கான்வே

அமெரிக்க சட்டத்திற்கு எதிராக, டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்பதற்கு முன்னரே, அமெரிக்கா ரஷ்யா மீது விதித்திருக்கும் தடைகளை அகற்றுவது குறித்து ரஷ்ய தூதரோடு கலந்துரையாடியிருக்கலாம் என்ற தகவல் வெளிவந்திருப்பதை அடுத்து, அவரை ஆலோசகர் நிலையில் இருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

அதிபர் டிரம்ப், மைக்கேல் பிளின் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தார் என்று வெள்ளை மாளிகை வழக்குரைஞர் கெல்லியானே கான்வே தெரிவித்திருக்கிறார்.

ஆனால், ஜெனெரல் பிளின் பற்றிய நிலைமையை டிரம்ப் ஆராய்ந்து வருவதாக அதிபர் டிரம்பின் செய்தி தொடர்பாளர் பின்பு கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption 2015 ஆம் ஆண்டு ரஷ்ய அதிபரோடு மைக்கேல் பிளின்

மைக்கேல் பிளின் அமெரிக்க மக்களிடம் பொய் கூறியிருப்பதால் அதிபர் டிரம்ப் அவரை தேசிய ஆலோசகர் பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்று முன்னிலை ஜனநாயகக் கட்சி தலைவர் நான்சி பெல்லோசி தெரிவித்திருக்கிறார்.

பிளின் ரஷ்ய நலன்களைக் காட்டிலும், அமெரிக்க மக்களின் நலன்களை முதன்மை படுத்துவார் என்று நம்ப முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க கருவூலத்துறையின் புதிய செயலராக பிரபல கோல்ட்மேன்ன் சாக்ஸ் வங்கியின் ஸ்டீவன் மினூசின்னை அமெரிக்க செனட் அவை உறுதி செய்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை ABC News

வங்கியில் பணியாற்ற நீண்டகால அனுபவம், இவரை இந்த பணிக்கு மிகவும் பொருத்தமானவராக ஆக்கியுள்ளது என்று குடியரசு கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இவருடைய நியமனத்தை எதிர்த்த ஜனநாயகக் கட்சியினரோ நிதிநெருக்கடியின்போது, கடன்களை திரும்பச் செலுத்த முடியாத குடும்பத்தினரின் வீடுகளை மீண்டும் கைப்பற்றி எடுத்த நடவடிக்கைகள் மூலமே மினூசின் தனது செல்வத்தை ஈட்டினார் என்று அவரை விமர்சனம் செய்துள்ளனர்.

மக்கள் வீடுகள் வாங்குவதற்கு மறுபடியும் நிதி வழங்க தான் கடினமாக உழைத்ததாக புதிய கருவூல செயலர் தெரிவித்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க :பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்