அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து விலகினார் பிளின்

அமெரிக்காவின் ரஷ்ய தூதரோடு கொண்ட தொடர்புகளில் நிர்வாகத்திற்குதவறான தகவல்களைத் தந்தார் என்று எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளின் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Reuters

டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்பதற்கு முன்னரே, அமெரிக்கா, ரஷ்யா மீது விதித்திருக்கும் தடைகளை அகற்றுவது குறித்து அமெரிக்க சட்டத்திற்கு எதிரான வகையில், ரஷ்ய தூதரோடு கலந்துரையாடியதாக அவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

டிரம்ப் நியமித்த மைக்கேல் பிளின் தேசிய ஆலோசகராக நீடிப்பாரா?

டிரம்ப் நிர்வாகம் பொறுப்பேற்று ஒரு மாதத்திற்குள் பிளினின் இந்த ராஜினாமா வந்துள்ளது,

ஜெனெரல் கெய்த் கெல்லோக் தற்காலிக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக வாஷிங்டனில் இருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க :பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்