டொனால்ட் ட்ரம்ப்பின் நெருங்கிய கூட்டாளி ராஜினாமா? பின்னணி என்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டொனால்ட் ட்ரம்ப்பின் நெருங்கிய கூட்டாளி ராஜினாமா செய்தது ஏன்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் ஃபிளின் இராஜினாமா செய்திருக்கிறார்.

ரஷ்யத் தூதருடனான தனது தொடர்புகள் குறித்து வெள்ளைமாளிகை அதிகாரிகளுக்கு தவறான தகவல் அளித்ததாக புகார் எழுந்ததைத்தொடர்ந்து இந்த பதவி விலகல் நடந்திருக்கிறது.

ரஷ்யாமீதான அமெரிக்கத்தடைகளை புதிய அரசு கைவிடும் சாத்தியங்கள் குறித்து மைக்கல் ஃபிளின் பேசியதாக கூறப்படுகிறது.

இது அமெரிக்க உள்விவகாரம் என்று வர்ணித்திருக்கும் ரஷ்யா இது குறித்து கருத்துக்கூற மறுத்துவிட்டது.