கலிஃபோர்னிய அணை விவகாரம்: வெளியேறியோர் வீடு திரும்ப உத்தரவு

அமெரிக்காவின் மிகவும் உயரமான அணை உடையலாம் என்ற ஆபத்து காரணமாக வெளியேற ஆணையிடப்பட்ட கலிஃபோர்னியாவை சேர்ந்தவர்கள், தங்களுடைய வீடுகளுக்கு திரும்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption அமெரிக்காவின் மிகவும் உயரமான அணை உடையும் ஆபத்தில் இருப்பதால் சுமார் 2 லட்சம் பேர் வெளியேற்றம்

மக்களை வெளியேறுவதற்கு இட்ட ஆணையை அகற்றுவதற்கு போதுமான அளவு நீர், ஒரெவெல் அணையிலிருந்து வடிந்துவிட்டது என்றும், ஆனால் இந்த எச்சரிக்கை இன்னும் நடைமுறையில்தான் உள்ளது என்றும் பியுட்டே வட்டத்தின் ஷெரிஃப் கோரி ஹோனே கூறியிருக்கிறார்.

கலிஃபோர்னியா அணை உடையும் ஆபத்து: 1.3 லட்சம் பேர் வெளியேற்றம்

தேவைப்பட்டால், உள்ளூர்வாசிகள் வெளியேற எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று இதனால் பொருள்படுகிறது.

படத்தின் காப்புரிமை AP
Image caption கலிஃபோர்னியாவில் இன்னும் அதிக மழை பெய்யும் என வானிலை அறிவிப்பு

இந்த அணையின் நீர் வடிகால் பகுதி உடையும் விளிம்பில் இருப்பதாக தோன்றியதால், ஞாயிற்றுக்கிழமை ஏறக்குறைய 2 லட்சம் பேர் அவ்விடத்திலிருந்து வெளியேற பணிக்கப்பட்டனர்.

பல ஆண்டுகள் வறட்சிக்கு பிறகு, கலிஃபோர்னியாவின் வட பகுதி அசாதாரணமான மழை வானிலையை அனுபவித்து வருகிறது. இன்னும் அதிக மழை பெய்யுமென கணிப்பட்டுள்ளது.

காணொளி: கலிஃபோர்னியா அணை உடையும் ஆபத்து

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கலிஃபோர்னியா அணை உடையும் ஆபத்து

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்