பாகிஸ்தான் தர்காவில் குண்டு வெடிப்பு: 25 பேர் பலி

பாகிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள தர்கா ஒன்றிற்கு அருகில் நடந்த குண்டு வெடிப்பில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் டஜனுக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.

படத்தின் காப்புரிமை AFP
Image caption தாக்குதல் நடைபெற்ற தர்கா(கோப்புப் படம்)

சிந்து மாகாணத்தில் சேவான் நகரில் உள்ள லால் ஷபாஸ் குல்லந்தர் தர்கா அருகில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

பிரதமர் நவாப் ஷெரிஃப் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் மேலும் பாகிஸ்தான் மக்களை "ஒற்றுமையாக இருக்குமாறு" வலியுறுத்தியுள்ளார்.

தற்கொலை குண்டு தாக்குதல்தாரி, தர்காவிற்குள் நுழைந்து வழிப்பாட்டாளர்களுடன் , குண்டை வெடிக்கச் செய்துவிட்டார் என்று மாகாணத்தின் போலிஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சமா என்ற தொலைக்காட்சி சேனல் முதலில் 50க்கும் அதிகாமானோர் காயமடைந்ததாக தெரிவித்தது மேலும் ஜியோ என்ற மற்றொரு சேனல் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 100க்கும் அதிகம் என குறிப்பிட்டது.

இந்த தர்கா பாகிஸ்தானில் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது மேலும் வியாழக்கிழமை முஸ்லிம் மக்களுக்கு புனிதமான நாளாக கருதப்படுவதால் அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

தொடர்புடைய தலைப்புகள்