தர்கா மீது நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி; 31 தீவிரவாதிகள் கொலை

  • 17 பிப்ரவரி 2017

நேற்று பாகிஸ்தானில் உள்ள தர்கா ஒன்றின் மீது நடைபெற்ற தாக்குதலில் குறைந்தது 80 பேர் பலியானதை தொடர்ந்து நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றில் டஜன்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

சுமார் 18 தீவிரவாதிகள் தெற்கு சிந்து மாகாணத்தில் கொல்லப்பட்டுள்ளனர். அங்குத்தான் அந்த தர்கா அமைந்திருந்தது.

மேலும் 13 பேர் வட-மேற்கு பகுதியில் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேவான் நகரில் இருந்த சூஃபி தர்காவில் தற்கொலை குண்டுத்தாரி ஒருவர் வழிப்பட வந்திருந்தோர் மத்தியில் தன்னைத்தானே வெடிக்க வைத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இஸ்லாமிய அரசு என அழைத்துக்கொள்ளும் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

ஜிஹாதி குழுக்கள் நடத்திவரும் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் இது சமீபத்தியதாகும்.

தாக்குதலில் பலியானவர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

சிந்து மாகாண அரசாங்கம் மூன்றுநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் சுமார் 250 பேர் காயமடைந்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்