கால்பந்தை தலையால் அடித்தால் ஞாபக மறதி நோய் வருமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கால்பந்தை தலையால் அடித்தால் ஞாபக மறதி நோய் வருமா?

கால்பந்தாடுவதற்கும் ஞாபக மறதி நோய்க்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்த ஆய்வுத்திட்டம் ஒன்றுக்கு ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் ஆதரவு வழங்குகின்றது.

முன்னாள் கால்பந்து வீரர்கள் சிலரின் தலைக்காயங்களுக்கும் மூளைப் பாதிப்புக்கும் தொடர்பு இருப்பதற்கான சாத்தியம் குறித்து அண்மைய ஆய்வு ஒன்று கூறியதை அடுத்து இந்த நடவடிக்கை வந்துள்ளது.

ஞாபக மறதி நோயினால் இறந்த ஆறு முன்னாள் கால்பந்து வீரர்களின் மூளையை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

அவர்களில் சிலர் பல தடவைகள் தலையில் அடிபட்டதுடன் தொடர்புள்ள ஒருவகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.