தமிழக அரசியல் நிலவரம் : மிக்சர் சாப்பிடுவது நாம்தான்; நடிகர் சூர்யா காட்டம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்று பெற்றுள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை TWITTER

கமல் ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்குவதற்குமுன், இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை. வெல்வது நல்ல மக்களின் மந்திரமா அந்தச் சொக்கனின் தந்திரமா பார்ப்போம் என்று பதிவிட்டிருந்தார்.

வாக்கெடுப்பு முடிந்த பின்னர் அவர் பதிவிட்ட ட்வீட்டில், தமிழக மக்களே உங்கள் தொகுதி எம்.எல்.ஏக்களை வீடு திரும்பியவுடன் அவர்களுக்கு தர வேண்டிய மரியாதையை செய்யுங்கள் என்றும், Rajbhavantamilnadu@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் தங்களுடைய மன உளைச்சலை தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இது அவமானம். ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ட்விட்டரில் நடிகை ராதிகா கருத்து தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை TWITTER

தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள் தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி நடைபெறும் என்கிறார்கள். முட்டாள்கள், எஸ்.ஆர் பொம்மை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பானது அதற்கு தடையாக உள்ளது. சபாநாயகர் குரல் வாக்கெடுப்பை நடத்த வேண்டும். அதுவே சட்டப்பூர்மாக செல்லும் என்று பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை TWITTER

சசிகலாவிற்கு ஒரு லேப்டாப்பை கொடுத்துவிடுங்கள். எடப்பாடி கே.பழனிச்சாமி மற்றும் அவரது சகாக்கள் அடுத்த நான்கு வருடத்திற்கு போக்குவரத்து கட்டணத்தை சேமிக்கட்டும். நாம் உண்ணும் உணவில் அதிக உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டிய தருணம் என்று நடிகர் சித்தார்த் கருத்து தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை TWITTER

சமூக வலைத்தளமான ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் சூர்யா, இப்போது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாம் தான் நண்பர்களே என்று பதிவிட்டுள்ளார்.

ஸ்டாலின் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தது தமிழகமெங்கும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

மெரினாவில் தர்ணாவில் ஈடுபட்ட ஸ்டாலின், திமுகவினர் கைது

பெரும்பான்மையை நிரூபித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் சட்டை கிழிப்பு (புகைப்படத் தொகுப்பு)

சட்டப்பேரவையிலிருந்து ஸ்டாலின் உட்பட திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்

சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் சட்டை கிழிப்பு (புகைப்படத் தொகுப்பு)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்