கலைகிறது கொலம்பியாவின் ஃபார்க் அமைப்பு: அமைதி ஒப்பந்தம் எதிரொலி

கொலம்பியாவின் மிகப்பெரிய கிளர்ச்சி குழுவான ஃபார்க்கை கலைக்கும் வகையில், அதன் கடைசி 300 உறுப்பினர்கள் மாற்று முகாம்களுக்கு வந்தடைந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

பல தசாப்தங்களாக நடந்து வந்த ஆயுத மோதலை முடிக்கும் வகையில் கடந்த வருடம் ஃபார்க் அமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

சுமார் 7000 போராளிகள், காடுகளில் அவர்கள் இடங்களிலிருந்து நீண்ட தூர பயணம் செய்து, இருபதிற்கும் மேலான மாற்று மண்டங்களுக்கு சென்று விட்டனர்.

ஆனால் அந்த முகாம்கள் தயாராகவில்லை என ஐ.நா கவலை தெரிவித்திருந்தது.

ஃபார்க் அமைப்பின் ஆயுதங்கள் பாதுகாப்பான இடங்களில் வைக்கக்கூடிய வசதிகள் ஏற்படும் வரையிலும் மற்றும் முகாம்கள் தயாராகும் வரையிலும் ஃபார்க் அமைப்பை கலைப்பதற்கான கால அட்டவனையை தாமதப்படுத்த வேண்டும் என ஐநா அதிகாரிகள் அரசிடம் கேட்டு கொண்டுள்ளனர்.

இந்த தாமதம் கடினமான நிலப்பரப்பு மற்றும் சரியான சாலை வசதிகள் இல்லைமையால் நிகழ்கிறது என அரசு தெரிவித்துள்ளது.சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்