தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்தி ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் பேச்சு

ஃப்ளோரிடா மாகாணத்தின் மெல்பர்னில் தனது ஆதரவாளர்களின் பேரணியில் பேசிய டிரம்ப், அமெரிக்க அதிபராக பதவியேற்று இதுவரை தான் புரிந்த சாதனைகளை குறிப்பிட்டு உரை நிகழ்த்தினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவில் தற்போது ஒரு நம்பிக்கை அலை வீசுவதாக பேசிய அவர், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த தனது பிரச்சார வாக்குறுதிகளை மீண்டும் குறிப்பிட்டு பேசினார்.

ஊடகங்கள் பொய்யான செய்திகளை பரப்புவதாகவும் அவைகளுக்கென்று ஒரு செயல் நிரல் வைத்துக்கொண்டு செயல்படுவதாகவும் மற்றொரு கடுமையான தாக்குதலை ஊடகங்கள் மீது தொடுத்தார் டிரம்ப்.

ஏழு முக்கிய முஸ்லிம் நாட்டின் மக்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு தடைவிதித்த தனது சமீபத்திய செயலாக்க ஆணையை நியாயப்படுத்தி பேசிய டிரம்ப், "கெட்ட எண்ணங்கள் கொண்ட மக்கள் எங்கள் நாட்டிற்கு தேவையில்லை'', என்றார்.மேலும் அவர் பேசுகையில் நண்பர்கள் மற்றும் மக்களுடன் இருப்பதற்காக தான் ஃப்ளோரிடா வந்ததாகத் தெரிவித்தார்."

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்