முதல் வெளிநாட்டு பயணத்தில் ஜெர்மனி நாஜி முகாமை சந்திந்த மைக் பென்ஸ்

அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்ற பிறகு, மைக் பென்ஸ் மேற்கொண்டு வரும் முதலாவது வெளிநாட்டு பயணத்தின்போது, ஜெர்மனியின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் டகோவிலுள்ள நாஜி சித்ரவதை முகாமை பார்வையிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை EPA

தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ள மைக் பென்ஸ், அந்த முகாமில் இருந்து உயிர் தப்பிய ஒருவரை சந்தித்ததோடு, இரண்டாம் உலகப்போரின்போது, 40 ஆயிரம் கைதிகள் கொல்லப்பட்ட அந்த முகாமிற்குள்ளே இருக்கும் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

1945 ஆம் ஆண்டு அமெரிக்க படைப்பிரிவுகள் இதனை விடுவித்தன.

படத்தின் காப்புரிமை EPA

ஐரோப்பிய அமெரிக்க கூட்டணிக்கு அமெரிக்கா அளிக்கின்ற உறுதியான அர்ப்பணத்தை சனிக்கிழமை வழங்கியதொரு உரையில் மைக் பென்ஸ் வெளிப்படுத்தியுள்ளார்.

பிரதமர் சார்லஸ் மிச்சேலுடன் பேச்சுவார்த்தை நடத்த அவர் பெல்ஜியத்தில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

திங்கள்கிழமையன்று பிரஸ்ஸல்ஸில் வைத்து ஐரோப்பிய ஒன்றிய அரசியல்வாதிகளையும், நேட்டோ பொதுச் செயலாளரையும் மைக் பென்ஸ் சந்திப்பார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்