கிம் மரணம் தொடர்பாக கைதான வடகொரிய நபரை விடுவித்து நாடுகடத்த மலேசியா முடிவு

மலேசியாவில் கிம் ஜோங்-நாமின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வடகொரியாவைச் சேர்ந்த சந்தேக நபர் விடுவிக்கப்பட்டு நாடு கடத்தப்படுவார் என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption சந்தேக நபர் 'ரி ஜோங் சோல்'

இதுகுறித்து கருத்து தெரிவித்த மலேசிய அட்டார்னி ஜெனரல் முகமது அபான்டி அலி கூறுகையில், 'ரி ஜோங் சோல் என்ற நபர் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்யப்பட்டு, அவருக்கு எதிராக குற்றம் சாட்ட போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் விடுவிக்கப்படுகிறார்' என்று தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதியன்று, முகத்தில் வி எக்ஸ் எனப்படும் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் கொடிய விஷமான வி எக்ஸ் ரசாயனம் தாக்கப்பட்டு, வட கொரிய தலைவரின் ஒன்றுவிட்ட மூத்த சகோதரர் கிம் ஜோங்-நாம் உயிரிழந்தார்.

கடந்த புதன்கிழமையன்று, இந்த கொலை தொடர்பாக இரு பெண்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வட கொரிய தலைவரின் உறவினரான கிம் ஜோங்-நாம் கொலையில் தொடர்புள்ளதாக ஒரு தூதரக அதிகாரி உள்பட பல வடகொரியர்களை சந்தேகித்தின் பேரில் மலேசியா தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்