அதிக இழப்பீடு பெற விவாகரத்து செய்யும் சீன கிராமத்து தம்பதியினர்

படத்தின் காப்புரிமை Getty Images

சீனாவின் தென் பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், வீடுகள் வலுக்கட்டாயமாக இடிக்கப்படுவதால் அதிகப்படியான இழப்பீடை பெற அங்கு வாழும் 160க்கும்மேலான தம்பதியினர் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.

சினாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சுவின், ஜியாங்பே கிராமத்தை உயர் தொழில்நுட்ப வளர்ச்சி மண்டலமாக மாற்ற அங்குள்ள 160 வீடுகள் இடிக்கப்படவுள்ளன.

எனவே அங்குள்ள தம்பதியினர் விவாகரத்து செய்து தனியாகவாழ்வதாகத் தெரிவித்தால் இரண்டு புதிய வீடுகள் கிடைக்கும். மேலும் குறைந்தபட்சம் 19 டாலர்கள் கூடுதல் இழப்பீடு கிடைக்கும் என்பதையும் அவர்கள் தெரிந்து கொண்டனர்.

அதில் சில தம்பதியினர் 80 வயதிற்கும் மேற்பட்டவர்கள். மேலும் அவர்களில் பெரும்பாலானோர் தொடர்ந்து, சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்