துருக்கி அதிபருக்கு எதிராக ஜெர்மனியில் குர்து மக்கள் ஆர்ப்பாட்டம்

ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் நகரில், சுமார் 30,000 துருக்கிய குர்து இன மக்கள், துருக்கி அதிபர் எர்துவானிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

படத்தின் காப்புரிமை Boris Roessler/dpa via AP

குர்திய புத்தாண்டிற்கு முன்னதாக நடைபெற்ற இந்த போராட்டத்தில், ஜெர்மன் முழுவதும் உள்ள குர்திய மக்கள் கலந்து கொண்டனர்.

துருக்கியில் ஜனநாயகம் வேண்டும் என்றும் அடுத்த மாதம் துருக்கி அதிபரின் அதிகாரத்தை அதிகரிப்பது குறித்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் இல்லை என்று வாக்களிக்கப் போவதாகவும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறையில் உள்ள குர்திய தீவிரவாத தலைவர் அப்துல்லா யொஜலாவின் படம் பதித்த கொடிகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

எர்துவானின் செய்திதொடர்பாளர் இந்த பேரணிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்; மேலும் இதற்கு அனுமதி வழங்கியதன் மூலம் ஜெர்மனி இரட்டை போக்கை கடைப்பிடிக்கிறது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பிற்கு ஆதரவு திரட்ட சில ஜெர்மனிய நகரங்களில் துருக்கிய அமைச்சர்களால் நடத்தப்படவிருந்த பேரணிகளுக்கு சமீபத்தில் அனுமதி வழங்கபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்