பெருவில் 20 ஆண்டுகளில் இல்லாத வெள்ளத்திற்கு இதுவரை 72 பேர் பலி

  • 19 மார்ச் 2017
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வெள்ளத்தில் சிக்கிய பெண்ணை மீட்பு பணியாளர்கள் மீட்கின்றனர்

பெரு நாட்டில் கடந்த இரண்டு தசாப்தங்களில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் குறைந்த 72 பேர் பலியாகியுள்ளதாக இதுவரை தெரியவந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல நாட்களாக பெய்த கன மழையால் ஆறுகள் நிரம்பி பல பகுதிகளில் நிலச்சரிவை ஏற்படுத்தியது.

காணொளி: சேற்று வெள்ளத்தில் சிக்கி போராடி தப்பிய பெண்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சேற்று வெள்ளத்தில் சிக்கி போராடி தப்பிய பெண்

800க்கும் மேலான நகரங்களில் அவசரக் கால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது; தலைநகர் லிமாவில் திங்கட்கிழமையிலிருந்து குடிநீர் கிடைக்கவில்லை.

கடலின் வெப்பநிலை அதிகரிப்பதால், நீராவியாதல் அதிகரித்து கனமழையை பொழியச் செய்யும் நிகழ்வாக கருதப்படும் எல் நினோ என்னும் பாதிப்பால், பெரு மற்றும் பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள நாடுகள் இந்த ஆண்டின் கோடைக் காலத்தில் நிலையற்ற வானிலையை சந்தித்து வருகின்றன.

காணொளி: சேற்று வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட உயிரினங்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பெரு: சேற்று வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட உயிரினங்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்