மோதலில் அகப்பட்டு மடியும் நைஜீரிய மக்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மோதலில் அகப்பட்டு மடியும் நைஜீரிய மக்கள்

கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான போக்கோ ஹராமை துரத்தும் நடவடிக்கைகளை இராணுவம் துரிதப்படுத்த, வடகிழக்கு நைஜீரியாவில் லட்சக்கணக்கான மக்கள் ஆபத்தில் சிக்கியுள்ளதாக ஐநா கூறுகிறது.

உணவுத்தட்டுப்பாடு காரணமாக பலர் தமது வீடுகள் மற்றும் பண்ணைகளை விட்டு வெளியேறி வருவதால், இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் வசதிகள் அழுத்தத்துக்கு உள்ளாகி வருகின்றன.

அங்கிருந்து பிபிசி குழு தரும் காணொளி.