கடும் எதிர்ப்புக்கிடையே ஹாங்காங்கின் முதல் பெண் தலைவர் தேர்ந்தெடுப்பு

ஹாங்காங்கின் புதிய தலைவராகவும், அப்பகுதியின் முதல் பெண் தலைவராகவும் கேரி லாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஹாங்காங்: டொனால்ட் ஸங் மீதான ஊழல் விசாரணை துவக்கம்

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கேரி லாம் (நடுவில் இருப்பவர்)

சீனாவின் ஆதரவு இருந்ததால் கேரி லாம் வெற்றி பெறுவார் என்று ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பதிலாக, ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி, சீன ஆதரவு வாக்காளர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இன்று ஞாயிற்றுகிழமையன்று வாக்கெடுப்பு நடந்த மையத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட ஜனநாயக ஆதரவு குழுக்கள், இத்தேர்தல் முறையை வெட்கக்கேடானது என்று வர்ணித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட ஜனநாயக ஆதரவு குழுக்கள்

லாமின் பிரதான எதிர்தரப்பு வேட்பாளரான முன்னாள் நிதித்துறை தலைவர் ஜான் சாங், மக்களின் ஆதரவினை பெற்ற வேட்பாளராக இருந்ததாக கருத்துக்கணிப்புகள் முன்னர் தெரிவித்திருந்தன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்