ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பான கடிதத்தில் தெரீசா மே கையெழுத்து

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பான கடிதத்தில், பிரதமர் தெரீசா மே கையெழுத்திட்டுள்ளதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான நடவடிக்கை முறையாக துவங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை PA
Image caption ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பான கடிதத்தில் தெரீசா மே கையெழுத்து

லிஸ்பன் ஒப்பந்தத்தின் சட்டவிதி 50-இன் கீழ் வழங்கப்பட்ட இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு, இன்று புதன்கிழமை மாலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்கிடம் அளிக்கப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் நடைமுறையை தொடங்கும் சட்டத்திற்கு ஒப்புதல்

இது தொடர்பாக நாடாளுமன்ற அவையில் பிரதமர் மே வெளியிடவுள்ள ஒரு அறிக்கையில், ''பிரிட்டன் ஒருங்கிணைந்து செயல்படும் தருணம் தற்போது வந்துள்ளது'' என்று கூறுவார் என்று தெரிகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் நடவடிக்கை: நீதிமன்றத் தீர்ப்பால் தாமதமாகுமா?

முன்னதாக, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடந்த கருத்தறியும் வாக்கெடுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கு ஆதரவாக பிரிட்டன் வாக்களித்தது. இதனை தொடந்து தற்போதைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை பிரிட்டன் நேரப்படி பிற்பகல் 12.30 மணிக்கு தெரீசா மே கையெழுத்திட்ட கடிதத்தை ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பிரிட்டன் தூதர் சர் டிம் பேரோ வழங்குவார்.

முன்னதாக, இன்று காலையில் பிரிட்டன் அமைச்சரவை கூட்டத்துக்கு தலைமையேற்கும் பிரதமர் தெரீசா மே, அதன் பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் பேசவுள்ள உரையில் உறுதி செய்வார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்