ஜெர்மன் கால்பந்து அணி பயணம் செய்த பஸ் மீது வெடிகுண்டுத் தாக்குதல்

ஜெர்மனியின் பொருஸியா டார்ட்மன்ட் கால்பந்து அணி பயணம் செய்த பஸ்ஸில் மூன்று குண்டுவெடிப்புக்கள் ஏற்பட்டன. முக்கிய வீரரான மார்க் பர்த்ரா கையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Science Photo Library
Image caption பஸ்ஸுக்கு அருகில் 3 குண்டுவெடிப்புகள் ஏற்பட்டதாக போலீஸ் தகவல்

மொமாகொ அணிக்கு எதிரான உள்ளூர் சாம்பியன்ஸ்லீக் கால்பந்துப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் பங்கேற்க அந்த அணி பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருந்தபோது பஸ்ஸுக்கு அருகில் மூன்று குண்டுகள் வெடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மற்ற வீரர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், ஸ்டேடியத்தைச் சுற்றி எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும் அந்த அணியினர், ஜெர்மனியில் ட்வீட் செய்துள்ளனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கால்பந்து அணி பயணித்த விமானம் வீழ்ந்தது

இதையடுத்து, கால்பந்துப் போட்டி புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption டார்ட்மன்ட் கிளப் மற்றும் ஸ்பெயின் சர்வதேச அணி வீரர் மார்க் பர்த்ரா காயம்

ஹோசஸ்டன் என்ற பகுதியில், நகருக்கு வெளியே ஏற்பட்ட இந்த குண்டுவெடிப்புக்கான காரணம் தெரியவில்லை.

இதுதொடர்பாக அந்த அணியின் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், பொருஸியா டார்ட்மண்ட் அணி புறப்பட்ட சிறிது நேரத்தில் சம்பவம் நடந்துள்ளது. பஸ்ஸின் இரண்டு இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பர்த்ரா முன்பு விளையாடிய பார்சிலோனோ கால்பந்து கிளப்பும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption குண்டுவெடிப்புக்குப் பிறகு பஸ்ஸை விட்டு வீரர்கள் செல்கிறார்கள்

ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோயும் பர்த்ரா விரைவில் குணமடைய வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் முன்னிலையில் உள்ள அணிகளில் நான்காவது முக்கிய அணி டார்ட்மன்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்