தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130க்கும் அதிகமானோர் சுட்டுக்கொலை

ஆஃப்கானிஸ்தானில் உள்ள ராணுவ தளம் ஒன்றில் தாலிபன் தொடுத்த தாக்குதல் நடவடிக்கையை அந்நாட்டு ராணுவம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இத்தாக்குதலில் 130க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் பெரும்பாலனவர்கள் அரசுப்படையினர்.

படத்தின் காப்புரிமை Reuters

வட புற பால்க் மாகாணத்தில் பலமணி நேரங்களுக்கு சண்டை நீடித்ததாக கூறப்படுகிறது.

ராணுவ தளத்திலிருந்த மசூதியிலிருந்து வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்து வெளியேறியவர்களையும், அங்கு ஓர் உணவகத்திலிருந்த மற்றவர்களையும் கிளர்ச்சியாளர்கள் குறிவைத்ததாக ராணுவ பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

செய்திக்குறிப்பு ஒன்றில் தாலிபன் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

ஆஃப்கானிஸ்தானில் எம்.பிகளின் பேரக்குழந்தைகளை கொன்ற தாலிபன் தீவிரவாதிகள்

தெற்கு ஆஃப்கானிஸ்தானில் தாலிபன் மீண்டும் நிறுவப்படவில்லை : ஹெல்மண்ட் மாகாண ஆளுநர் மறுப்பு

மேலும், தற்கொலை குண்டுதாரிகளை பயன்படுத்தி பாதுகாப்பு நிலைகளை தகர்த்ததாக கூறியுள்ளது.

மஸார்-இ-ஷரிஃப் என்ற நகரிலிருந்த ராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற இந்த மோதலில் குறைந்தது 10 தாலிபன் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஒரு தாக்குதல்தாரி தடுப்புக்காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக ஏ எஃப் பி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று பிபிசியிடம் உள்ளூர் தகவல் கூறுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்