Dramatic car crash captured on CCTV
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கண்காணிப்பு கேமராவில் அகப்பட்ட கிளிதோர்ப்ஸ் கார் மோதல்

ஐக்கிய ராஜ்ஜியத்தில் ஹம்பர்சைடிலுள்ள கிளிதோர்ப்ஸின் ஒரு தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு கார்களுக்கு இடையில், இன்னொரு கார் புகுந்து மோதிய விபத்து தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை மதியம் பார்குரோஃப்ட் தெருவில் நிகழ்ந்த இந்த விபத்தின் பரபரப்பான காட்சிகள் அங்கு குடியிருப்பவரான ஸ்டீவர்ட் வில்சன் வைத்திருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.

அநத காரில் வந்தோர் விபத்து நடந்தவுடன் காரிலிருந்து வெளியே வந்து விபத்து நடந்த பகுதியை விட்டு வெளியேறுவதையும், அதில் ஒருவர் நாயை கொண்டு செல்வதையும் இந்த காணொளி பதிவு காட்டுகிறது.

ஹம்பர்சைடு காவல்துறையினர் இதில் யாரும் காயமடையவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இந்த கார் மோதிய விபத்து தொடர்பாக 23 வயது இளைஞரும், 18 வயது இளம் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை மேலும் தெரிவித்திருக்கிறது.

23 வயது இளைஞர் காவல்துறையினரின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்