வடகொரியாவில் அமெரிக்க பிரஜை கைது - கொரிய பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம்

வடகொரியாவை விட்டு வெளியேறிச் செல்ல முயன்ற அமெரிக்க பிரஜை ஒருவர் அந்நாட்டில் கைது செய்யப்பட்டதாக தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption வடகொரியாவின் அணுஆயுத சோதனை திட்டத்தால் கொரிய தீபகற்பத்தில் அதிகரித்த பதற்றம்

கைது செய்யப்பட்ட நபர் அவரது குடும்பப் பெயரான கிம் என்ற பெயரால் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் வடகொரியாவில் கைது செய்யப்பட்ட முன்றாவது அமெரிக்கர் ஆவார். முதல் நபர் உளவு பார்த்தாக கைது செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது நபர் ஒரு ஹோட்டலில் திருட முயன்றதாக கைது செய்யப்பட்டார்.

வடகொரியாவின் அணுஆயுத சோதனை திட்டம் தொடர்பாக தங்களின் மூலோபாய பொறுமை காலம் கடந்து விட்டதாக அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்த அண்மைய கைது நடவடிக்கை நிகழ்ந்துள்ளது.

தனது 50 வயதுகளில் உள்ள கைது செய்யப்பட்ட அமெரிக்க பிரஜை, சீனாவில் உள்ள யான்பியான் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் என்றும், சில நிவாரண திட்டங்கள் தொடர்பாக கடந்த ஒரு மாதமாக அவர் வடகொரியாவில் இருந்ததாக தென் கொரிய செய்தி முகமையான யோன்ஹாப் தெரிவித்துள்ளது.

பியாங்யாங் சர்வதேச விமானநிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டதாக யோன்ஹாப் மேலும் தெரிவித்துள்ளது.

வடகொரியா பதற்றம் : அணுஆயுத அச்சுறுத்தல்கள் பற்றி சீனா 'தீவிரமாக கவலை'

முழுமையான போர்: வடகொரியா எச்சரிக்கை

`எங்களது பாணியில் அணு ஆயுத தாக்குதல் பதிலடி' - மிரட்டுகிறது வடகொரியா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்