புதிய ஃபிரான்ஸ் அதிபருக்கு காத்திருக்கும் சவால்கள்

படையினர் மரியாதை படத்தின் காப்புரிமை AFP

பிரான்ஸின் உலகளாவிய நிலையை மீட்டெடுக்கப்போவதாக புதிதாக பதியேற்றுள்ள 39 வயதான பிரான்ஸின் இளம் அதிபர் இம்மனுவெல் மக்ரோங் தெரிவித்திருக்கிறார்.

பதவியேற்பதற்கு முன்னதாக, பதவியில் இருந்து செல்கின்ற சோஷலிச அதிபர் பிரான்சுவா ஒலாந்தோடு மக்ரோங் ஒரு மணிநேரத்தை செலவிட்டார்.

படத்தின் காப்புரிமை AFP

பிரான்ஸின் அணுசக்தி ஆயுத தொகுதிகளின் குறியீடுகளை புதிய அதிபரிடம் வழங்கிய பின்னர், நாட்டை நல்ல நிலைமையில் விட்டுவிட்டு செல்வதாக கூறிய பிரான்சுவா ஒலாந்த், அதிபர் இல்லத்தை விட்டு வெளியேறினார்.

ஃபிரான்ஸ் அதிபருடன் காதல் மலர்ந்தது எப்படி?

நாட்டின் ஆயுதப்படையோடு ஒன்றிணைப்பை காட்டும் அடையாளமாக பச்சை நிற ராணுவ திறந்த காரில் பல பாதுகாப்பாளர்கயோடு மக்ரோங் பயணித்தார்.

படத்தின் காப்புரிமை AFP

பின்னர் இரண்டு உலகப் போர்களிலும் தங்களுடைய உயிரை தியாகம் செய்த படையினருக்காக ஆர்க் டி திரியோம்ஃபேக்கு அடியில் கட்டப்பட்டுள்ள நினைவிட கல்லறையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மக்ரோங் "அணையாமல் எரிகின்ற விளக்கை" மீண்டும் ஏற்றி வைத்தார்.

அதிபர் தேர்தலில் மக்ரோங் வெற்றியின் 5 ரகசியங்கள்

ஃபிரான்ஸ் வரலாற்றில் புதிய அத்தியாயம் துவக்கம்: புதிய அதிபர் இமானுவேல் மக்ரோங்

நெப்போலியனுக்கு பிறகு மிகவும் இளம் அதிபராக உருவாகியிருக்கும் மக்ரோங், நாட்டின் அரசியல் ஒழுங்குகளை சீர்திருத்தம் செய்வதாகவும், பொருளாதாரத்தில் புத்துணர்வு ஏற்படுத்தப் போவதாகவும் உறுதி அளித்திருக்கிறார்.

ஆனால், நிறுவப்பட்டு சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியடைந்திருக்கும் அவருடைய புதிய கட்சியை பொறுத்துதான் பொரும்பாலானவை ஆனால், நிறுவப்பட்டு சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியடைந்திருக்கும் அவருடைய புதிய கட்சியை பொறுத்துதான் பொரும்பாலானவை நடைபெறவுள்ளன.

திங்கள்கிழமை காலை புதிய பிரதமராக யார் பணியாற்றயுள்ளார் என்பதை மக்ரோங் அறிவிக்கவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

முதல் சுற்று ஃபிரான்ஸ் அதிபர் தேர்தலின் வேட்பாளர்கள் - ஒரு பார்வை

பிளவுபட்ட நாட்டை ஒருங்கிணைக்கப் போவதாக மக்ரோங் உறுதி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்