பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவை பாதிப்பு: இந்திய நிறுவனம் காரணமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவை பாதிப்பு: இந்திய நிறுவனம் காரணமா?

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் தகவல்தொழில்நுட்ப கணினி கட்டமைப்பு பழுதானதால் ஏற்பட்ட பெரும் பாதிப்பு காரணமாக அதன் உலகளாவிய விமான சேவைகள் பாதிக்கப்பட்டு மூன்றாவது நாளான இன்று (29-05-2017) படிப்படியாக விமான சேவைகள் செயற்பட ஆரம்பித்துள்ளன.

அந்த நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப வலையமைப்பில் மின்விநியோகம் தடைபட்டதால் ஹீத்ரோ மற்றும் கேட்விக் விமான நிலையங்களில் அதன் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன.

அதனால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

கணினி வலையமைப்பு பணிகளை சென்ற ஆண்டு இந்தியாவின் டாடா நிறுவனத்துக்கு அவுட்சோர்ஸ் செய்ததே இந்த பிரச்சனைக்கு காரணம் என ஜி எம் பி தொழிற்சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

ஆனால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தலைமை நிர்வாகி அலெக்ஸ் குரூஸ் இந்த குற்றச்சாட்டை கடுமையாக நிராகரித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்