பெருங்கடலிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற ஆசியா நாடுகள் வாக்குறுதி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பிளாஸ்டிக் மீது போர் தொடுக்கும் ஆசிய நாடுகள்

உலக அளவில் பெருங்கடலில் பிளாஸ்டிக் மாசுபாடு ஏற்பட காரணமான நாடுகள் தங்களுடைய செயல்பாடுகளை மாற்றி, மாசுபாட்டை குறைக்க வாக்குறுதி அளித்துள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

ஐக்கிய நாடுகள் அவை நடத்திய பெருங்கடல் பற்றிய உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட சீனா, தாய்லாந்து, இந்தோனீஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் பிரதிநிதிகள் பெருங்கடலில் பிளாஸ்டிக் பொருட்கள் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்திருக்கின்றன.

சில வாக்குறுதிகள் இன்னும் முறைப்படுத்தப்படவில்லை. முன்மொழியப்பட்டுள்ள சில நடவடிக்கைள் மிகவும் அவசரமாக செயல்படுத்த வேண்டியவையாக இல்லை என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐநா பாராட்டு

ஆனால், ஐக்கிய நாடுகள் அவை இந்த அறிக்கையை பாராட்டியுள்ளது.

பெருங்கடல் மாசுபாட்டிற்கு எதிரான, தெளிவான சர்வதேச மாற்றம் இதுவென நியூ யார்க்கில் நடைபெற்ற கூட்டத்தில் ஐநா தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் நுண் மணிகள் பயன்படுத்த தடை: பிரிட்டிஷ் அரசு திட்டம்

பிளாஸ்டிக் குப்பைகளை குறைக்கும் இந்தோனேஷிய முயற்சி பலன் தருமா?

ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச்சூழல் இயக்குநர் எரிக் சொல்கெய்ம் இது பற்றி குறிப்பிடுகையில், "பெருங்கடல் பிரச்சனையை தீவிரமாக எடுத்துகொண்டு நாடுகள் விவாதிப்பது சிறந்த ஊக்கமளிக்கும் அறிகுறிகளாகும். பிரச்சனைகள் மிக பெரியவை என்பதால் நிச்சயமாக இன்னும் செல்ல நீண்டப்பாதை உள்ளது" என்று பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

ஆண்டுதோறும் 5 முதல் 13 மில்லியன் டன் பிளாஸ்டிக் பொருட்கள் பெருங்கடலில் கலப்பதாக மதிப்பிடப்படுகிறது.

படத்தின் காப்புரிமை JAY DIRECTO/AFP/Getty Images

இதில் பெரும்பாலாவை பறவைகளாலும், மீன்களாலும் உட்கொள்ளப்படுகின்றன. பிளாஸ்டிக் துண்டுகள் பெருங்கடலின் ஆழத்திலுள்ள உயிரினங்களிலும் காணப்படுகின்றன.

பெருங்கடலிலுள்ள பிளாஸ்டிக்குகளில் பெரும்பாலானவை பெருங்கடலில் இருந்து மிகவும் தொலைவில் இருக்கின்ற, குறிப்பாக, தங்களின் கழிவுகளை கையாள தெரியாமல் நுகர்வு பொருளாதாரத்தை விரைவாக வளர்த்துகொண்ட நாடுகளால் தோன்றுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.

நிலத்திலிருந்து வருகின்ற பெருங்கடல் மாசுபாடு பெரும்பாலும் ஆசியாவிலுள்ள 10 ஆறுகளில் இருந்து வருவதாக ஜெர்மனியின் லெய்ப்சிக்கிலுள்ள ஹெல்ம்கோல்டஸ் மையம் தெரிவித்திருக்கிறது.

ஆஸ்திரேலிய கடற்பரப்பு "பிளாஸ்டிக் சூப்" ஆக மாறியுள்ளது: ஆய்வாளர்கள்

"கடல் பறவைகள் தொண்ணூறு சதவீதமானவற்றின் வயிற்றில் பிளாஸ்டிக்"

இந்த ஆறுகளில் வருகின்ற பிளாஸ்டிக் பொருட்களை 50 சதவீதம் குறைப்பதன் மூலம் உலக அளவில் பெருங்கடலில் கலக்கும் பிளாஸ்டிக் பொருட்களில் 37 சதவீதத்தை குறைக்க முடியும் என்று அது தெரிவித்திருக்கிறது.

அணுகுமுறையில் மாற்றம்

பெருங்கடல் பற்றிய விழிப்புணர்வு மேற்கொள்ளும் 'பிவ் செரிட்டபிள் டிரஸ்ட்யை' சேர்ந்த டாம் தில்லோன் சீனா விரைவாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

சீனாவின் கலாசாரத்தையும், செல்வாக்கையும் ஏற்றுமதி செய்கின்ற பாதையாக கடல்வழி பட்டுப்பாதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது.

சீனாவின் மாசுபாட்டை கடத்துவதற்கு பெருங்கடல் ஒரு கருவியாக இருக்குமா? அல்லது பாதுகாப்பு மற்றும் நிலையான ஒரு புதிய கலாசாரத்தையும் வழங்கும் கருவியாக இருக்குமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

படத்தின் காப்புரிமை ERNESTO BENAVIDES/AFP/Getty Images

ஐக்கிய நாடுகள் அவை மாநாட்டுக்கு தாய்லாந்து அரசு வழங்கிய அறிக்கையில், செயல்திறனற்ற கழிவுப்பொருட்கள் கையாளும் முறை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை மோசமாக கையாளுதல் காரணமான, பெருங்கடலில் சேர்கின்ற பெரும்பாலான பிளாஸ்டிக் பொருட்கள் நிலத்திலிருந்து வருபவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில், 2016 ஆம் ஆண்டு கடலில் கலந்த குப்பைகளின் மொத்த அளவு 2.83 மில்லியன் டன்களில் 12 சதவீதம் பிளாஸ்டிக் ஆகும்.

இந்த பிரச்சனையை கையாள, பிளாஸ்டிக் பெருங்கடலில் கலப்பதை தடுப்பதற்கு நிதி ஊக்கத்தொகை, சுற்றுச்சூழலுக்கு உகந்த பேக்கேஜிங் வடிவமைப்பு மற்றும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றான சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் உள்பட 20 ஆண்டு தொலைநோக்கு திட்டத்தை தாய்லாந்து வகுத்துள்ளது.

கடலில் மிக அதிக அளவில் பிளாஸ்டிக் பொருட்கள்

பிளாஸ்டிக் பைகளின் மீது வரி

பள்ளி குழந்தைகளுக்கு மிக பெரிய கல்வித் திட்டத்தை இந்தோனீஷிய அரசு தெரிவித்திருக்கிறது.

பிலிப்பைன்ஸ் புதிய விதிகளை வகுத்து வருகிறது,

பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப் பொருளை கண்டுபிடிப்பது தான் இதனை நிறைவேற்றுவதில் இருக்கின்ற சவாலாகும்.

சிறந்த பொருட்கள் மற்றும் பேக்கேஜிங் வடிவமைப்புக்கு சர்வதேச பரிசு வழங்குவதை சமீபத்தில் எல்லன் மேக்அர்தர் அறக்கட்டளை தொடங்கியுள்ளது.

பிளாஸ்டிக் சாலைகள்: இங்கிலாந்துக்கு வழிகாட்டிய இந்தியா

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பிளாஸ்டிக் சாலைகள்: இங்கிலாந்துக்கு வழிகாட்டிய இந்தியா

பிற செய்திகள்

விமானியின்றி இயங்கும் தொழில்நுட்பம் ஆய்வு - போயிங்

இதய நோய் ஆபத்துக்களிலிருந்து 'திருமண பந்தம்' பாதுகாக்கும்: ஆய்வு தகவல்

தொடரும் விவசாயிகள் போராட்டம் – காரணங்கள் என்ன ?

வளைகுடா நாடுகளில் ரமலான் நோன்பு வைக்காதவர்களின் நாள் எப்படிச் செல்கிறது?

சர்வதேச போட்டிகளில் வென்ற பதக்கங்களை விற்க தடைச் சட்டம்: இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்