உலக அளவில் நடந்த 5 பெரிய தீ விபத்துகள்

இதுவரை 17 பேர் பலியாகியுள்ள லண்டன் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ பரவிய சம்பவம், ஐக்கிய ராஜ்ஜியத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்நிலையில் உலக அளவில் நடைபெற்ற ஐந்து பெரிய தீ விபத்துக்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

படத்தின் காப்புரிமை PA
  1. பிளாஸ்கோ கட்டடம், இரான், ஜனவரி 2017: இரான் தலைநகரில் இருந்த 17 மாடி வணிகக் கட்டடத்தில் பரவிய தீயால், 18 தீயணைப்பு வீரர்கள் உள்பட பலர் உயிரிழந்தனர். இந்தக் கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்திற்கு முன்னரே பாதுகாப்பற்றதாக இக்கட்டடம் குறிப்பிடப்பட்டிருந்தது.
  2. பாகு, அஜர்பைஜான், மே 2015: குடியிருப்புக் கட்டத்தில் ஏற்பட்ட தீயால், 5 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாயினர். கட்டடத்தின்மீது வேயப்பட்டிருந்த உலோகமே தீ பரவியதற்கு காரணமாக கூறப்பட்டது.
  3. த டார்ச், துபாய், பிப்ரவரி 2015: உலகிலேயே மிகவும் உயரமான குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 79 மாடி கொண்ட வானளாவிய கட்ட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட வேண்டியதாயிற்று.
  4. கிராஸ்நோயாஸ்க், ரஷ்யா, செப்டம்பர் 2014: 25 மாடி கட்டடம் தீயால் சேதமடைந்தது. அதிலிருந்து 115 குடியிருப்புவாசிகளும் அதனைவிட்டு வெளியேறிவிட்டனர். உயிரிழப்பு இல்லை.
  5. ஷாங்காய், சீனா, நவம்பர் 2010: 28 மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீயால், 53 பேர் பலியாயினர். 90 பேர் காயமடைந்தனர். இந்த விபத்திற்கு உரிமம் பெறாத வெல்டர்கள் காரணம் என்று சீன அரசு ஊடகங்கள் தெரிவித்தன.

தொடர்புடைய செய்திகள்

லண்டன் தீ விபத்து (புகைப்படத் தொகுப்பு)

லண்டன் தீ: பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு

பிற செய்திகள்

தீயிலிருந்து காப்பாற்ற குழந்தையை ஜன்னல் வழியே வீசிய தாய்

கிரிமினல் விசாரணையில் டிரம்ப் தலையிட முயன்றாரா?

சாம்பியன்ஸ் கோப்பை: இறுதிப் போட்டியில் நுழைய இந்தியாவுக்கு இலக்கு 265

அமெரிக்காவிடமிருந்து 12 பில்லியன் டாலருக்கு ஆயுதங்களை வாங்கும் கத்தார்

தமிழக விவசாய பல்கலைக்கழக சேர்க்கையில் வெற்றிபெற்ற பழங்குடி பெண்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்