`சூடு தாங்கமுடியவில்லை': குட்டை பாவாடை அணிந்து மாணவர்கள் நூதனப் போராட்டம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பள்ளிக்கு அரைப்பாவாடை அணிந்துச் சென்ற ஆண் மாணவர்கள்

அரைக்கால் சட்டை அணிய அனுமதியில்லை என்று பள்ளியில் கூறப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இங்கிலாந்தின் எக்ஸிடெர் நகரில் 30 மாணவர்கள் குட்டைப் பாவாடை அணிந்து தங்களுடைய எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர்.

வெப்பமான காலநிலையை முன்னிட்டு தங்களுடைய சீருடையை மாற்றக் கோரி இங்கிலாந்தின் எக்ஸிடெர் நகரிலுள்ள ஐஎஸ்சிஏ அகாடமி மாணவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர் என்று 'டிவான் லைவ்' செய்தி இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது,

"நாங்கள் அரைக்கால்சட்டை அணிய அனுமதிக்கப்படவில்லை. நான் நாள் முழுவதும் முழுக்கால்சட்டையோடு அமரப்போவதில்லை. சற்று வெப்பமாக உள்ளது" என்று இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஒரு மாணவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பள்ளியின் சீருடையில் அரைக்கால்சட்டை இல்லை என்று தலைமையாசிரியர் அர்மீ மிஷேல் கூறியிருக்கிறார்.

அரைக்கால் சட்டை சீருடையின் ஒரு பகுதியாக இந்தப் பள்ளிக்கூடத்தில் இல்லை என்கிற கொள்கை முடிவு, இந்தப் போராட்டத்திற்கு பிறகு மறுபரிசீலனை செய்யப்படும் என்று மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தலைமையாசிரியர் இது கருத்தில் கொள்ளப்படும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில நாட்களாக, முன்பில்லாத வகையில் வெப்பம் அதிகரித்திருப்பது தெரிகிறது. மாணவர்களும், ஆசிரியர்களும் முடிந்தவரை வசதியாக இருக்கச் செய்யவே விரும்புகிறோம் என்று மிஷேல் தெரிவித்திருக்கிறார்.

மாணவர்களுக்கான சீருடையில் தற்போது அரைக்கால்சட்டை இல்லை. மாணவர்களிடமும், அவர்களின் குடும்பத்தினரிடமும் கலந்துரையாடாமல், மாற்றங்களையும் கொண்டுவர விரும்பவில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

சூடான வானிலை அதிகமாகும்போது, எதிர்காலத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என்று தலைமையாசிரியர் தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்

ஆஃப்கன் ராணுவ சீருடைக்கு ஊதாரித்தனமாக செலவு: அமெரிக்கா மீது குற்றச்சாட்டு

மது அருந்த எல்லை கடந்து மாட்டிக்கொண்ட பிரிட்டிஷ் விளையாட்டுக் குழு

செளதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசரை பற்றிய ஐந்து விஷயங்கள்

மொசூலுக்கான போர்: அல்-நூரி பள்ளிவாசலைத் தகர்த்த ஐ எஸ்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்