ஃபிரான்ஸ் அதிரடி: பெட்ரோல், டீசல் கார்களுக்கு வருகிறது ஒட்டுமொத்த தடை

படத்தின் காப்புரிமை Reuters

வரும் 2040 ஆம் ஆண்டிற்குள், பெட்ரோல் அல்லது டீசலை எரிபொருளாக பயன்படுத்தும் எந்தவொரு கார் விற்பனையையும் ஃபிரான்ஸ் தடைவிதிக்க உள்ளது. இதனை ஒரு புரட்சி என்று சூழலியல்துறை அமைச்சர் அழைத்துள்ளார்.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக பெட்ரோல், டீசல் மீதான திட்டமிடப்பட்ட தடையை நிகோலஸ் ஹுயுலோ அறிவித்துள்ளார்.

2050 ஆம் ஆண்டிற்குள் கார்பன் வெளியீடு இல்லாத நாடாக ஃபிரான்ஸ் உருவாக திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஃபிரெஞ்சு சந்தையில் ஹைபிரிட் கார்களின் சந்தை 3.5% ஆக உள்ளது. அதில், வெறும் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தும் கார்களின் சந்தை 1.2% ஆக உள்ளது.

தற்போது பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களை, 2040-க்குப் பிறகு என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பற்றிய எந்தவித தெளிவான அறிவிப்பும் இல்லை.

ஒரு மூத்த சுற்றுச்சூழல் பிரசாரகரான ஹுயுலோ, புதிய ஃபிரெஞ்சு அதிபர் இமானுவேல் மங்ரோங்கால் நியமிக்கப்பட்டார். அமெரிக்காவின் சுற்றுச்சூழல் கொள்கைகளை வெளிப்படையாக விமர்சித்துள்ள மக்ரோங், பூமியை மீண்டும் சிறப்பாக்க டொனால்ட் டிரம்பை வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் அதிபர் டிரம்பின் முடிவு, ஃபிரான்ஸின் இந்த புதிய வாகன திட்டத்திற்கு ஒரு முக்கிய காரணி என்பது மறைமுகமாகக் கூறப்பட்டது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்