ஹாங்காங்கில் விமானந்தாங்கி போர்க்கப்பல் - மிரட்டுகிறதா சீனா?

படத்தின் காப்புரிமை AFP

சீனாவின் முதலாவது விமானந்தாங்கியான "லியாவ்நிங்" கப்பல் ஹாங்காங்கை வந்தடைந்துள்ளது.

சீனாவின் பெருநிலப்பரப்புக்கு வெளியே முதலாவது பயணமாக "லியாவ்நிங்" வந்திருப்பது, ஹாங்காங்கை, பிரிட்டன் சீனாவிடம் கையளித்த 20வது ஆண்டை அடையாளப்படுத்தும் நிகழ்வுகளின் ஒரு பகுதியாகும்.

சீன அதிபராக ஷி ஜின்பிங்கின் கடந்த வாரப் பயணத்தை தொடர்ந்து "லியாவ்நிங்" ஹாங்காங்கை வந்தடைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

போராட்டங்களால் நிறைந்திருந்த சீன அதிபரின் இந்த பயணத்தின்போது, சீன மத்திய அரசுக்கு எதிரான எந்த சவால்களையும் அனுமதிக்க முடியாது என்று ஷி ஜின்பிங் எச்சரித்திருந்தார்.

தன்னாட்சி மற்றும் சுதந்திரத்திற்கு கூட கோரிக்கை விடுக்கும் அளவுக்கு சமீபத்திய ஆண்டுகளில் ஹாங்காங் அரசியல் நிலைமை பதட்டமாகி வளர்ந்துள்ளது.

ஹாங்காங்கின் தலைவரை தேர்ந்தெடுக்கும் நேரடி தேர்தலை அனுமதிப்பதாகவும், ஆனால், ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்களில் இருந்து தான் அந்த தலைவர் தேர்தெடுக்கப்பட வேண்டும் என்றும் 2014 ஆம் ஆண்டு சீனா அறிவித்தது. இந்த அறிவிப்பு "அம்பிரல்லா" போராட்டம் என்று அறியப்படும், ஹாங்காங்கை ஆளும் தலைவரை வயதுவந்தோர் அனைவரும் வாக்களிக்கும் உரிமை கோரும் மாபெரும் போராட்டம் நடைபெற வழிவகுத்தது.

பிற செய்திகள்

காவல்துறையின் பலத்த பாதுகாப்புக்களின் மத்தியில் அதிபர் ஷி ஜின்பிங்கின் பயணம் நடந்தேறியுள்ளது. சனிக்கிழமை சீன அதிபர் புறப்பட்டதை தொடர்ந்து, மேலதிக ஜனநாயகம் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் ஆண்டு நிகழ்வான பேரணியில் ஆயிரக்கணக்கானனோர் கலந்து கொண்டுள்ளனர்.

ஹாங்காங்கில் விமானந்தாங்கி கப்பலான "லியாவ்நிங் வந்திருப்பது, சீனா தன்னுடைய ஆயதப் பலத்தை வெளிக்காட்டுவதாக சிலரால் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த விமானந்தாங்கி கப்பலை பார்வையிட இலவச நுழைவுச்சீட்டுகளுக்கு வரிசையில் நிற்கும் ஹாங்காங் மக்களும் உள்ளனர்.

படத்தின் காப்புரிமை Alamy

மூன்று போர்க்கப்பல்களோடு வந்திருக்கும் இந்த விமானந்தாங்கி "லியாவ்நிங்", ஹாங்காங்கின் சிங் யி தீவில் 5 நாட்கள் நிற்கவுள்ளது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முன்பில்லாத காட்சி

1997 ஆம் ஆண்டு ஹாங்காங்கை பிரிட்டன் சீனாவிடம் கையளித்தது தொடங்கி, சீன விடுதலை படை ஹாங்காங்கில் தங்கியிருக்கிறது. ஆனால், இந்த படையினர் ஆரவாரம் இல்லாமல் அங்குள்ளனர். சீன விடுதலை படையினரை சீருடையோடு தெருக்களில் பார்ப்பது மிகவும் அரிது.

அதனால்தான், ஹாங்காங் சுதந்திரத்தை கோரும் பிரிவுகளுக்கு எதிராக அதிபர் ஷி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்த சில நாட்களில் விமானந்தாங்கி கப்பலான "லியாவ்நிங் வெளிப்படையாக ஹாங்காங் வந்திருப்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images

கிளர்ச்சி வளரும் ஹாங்காங்கில் ராணுவ சக்தியை வெளிக்காட்டுவது இதற்கு முன்னர் நடந்திராதது என்று சீனாவை தொடர்ந்து கண்காணித்து வருவோர் தெரிவிக்கின்றனர். இதனை பொது மக்கள் பார்ப்பதற்கு அனுமதிருப்பது என்பது சீனாவின் தன்னுடைய வல்லமையை மென்மையாக வெளிப்படுத்தும் உத்தியாகும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

300 மீட்டர் (990 அடி) நீள இந்த விமானந்தாங்கி கப்பல் உக்ரைனிடம் இருந்து வாங்கப்பட்ட கஸ்னெட்சொவ் பிரிவின் புதுப்பிக்கப்பட்ட சோவியத் கப்பலாகும். இது 1980களின் பிற்பகுதியில் கட்டப்பட்டதாகும்.

பிற செய்திகள்

உலகளாவிய மேடையில் தன்னுடைய ராணுவ ஆற்றலை அதிகரித்து காட்டும் சீனாவின் மாபெரும் முயற்சிகளில் இது ஒரு பகுதியாகும்.

கடந்த ஏப்ரல் மாதம், உள்நாட்டிலேயே செய்யப்பட்ட இன்னொரு விமானந்தாங்கி கப்பலை சீனா வெள்ளோட்டம் விட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு இந்த புதிய விமானந்தாங்கி செயல்பட தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

ஹாங்காங்குக்கு சுதந்திர தேர்தல் கோரியபோது கைதான ஹாங்காங் போராளி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
100 பெண்கள் தொடர்: ஹாங்காங் போராளி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்