Was this the most awkward G20 ever?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இது உச்சி மாநாடா, உச்சகட்ட காமெடியா? (காணொளி)

ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் நகரில் ஜி20 உச்சி மாநாடு நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் பங்கேற்ற உலகத்தலைவர்களின் செய்கைகள் மற்றும் நடவடிக்கைகள் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாக பரப்பப்பட்டு வருகின்றன. அதுகுறித்த காணொளி தொகுப்பு இது.

ஜி20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் அனைவரும் ஒன்றாக குரூப் போட்டோவிற்காக நின்று கொண்டிருந்த போது, ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் கீழே இறங்கி அதிபர் டிரம்பிற்கு பக்கத்தில் வந்து நிற்கிறார். அதற்குமுன், டிரம்பின் தோலில் ஆசையாக தட்ட, அதை சற்றும் எதிர்பாராத டிரம்ப் சிரிக்கிறார்.

அதேபோல், போலந்தின் முதல் பெண்மணியுடன் கைகுலுக்க டொனால்ட் டிரம்ப் கையை நீட்டிய போது, அதை கண்டுகொள்ளாத முதல் பெண்மணி அகாட்டா கொர்ன்ஹவுசர்-டுடா டிரம்பின் மனைவி மெலானியா டிரம்புடன் கைகுலுக்கினார். இது டிரம்பிற்கு பெரும் தர்மசங்கடமாக போனது. இந்த காணொளி சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாக பரப்பப்பட்டது.

ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் ஏங்கெல்லா மெர்கல் சந்திப்பின் போது, மெர்கலிடம் விஷயம் ஒன்றை புதின் விளக்கி கூறிய போது, ஏங்கெல்லா மெர்கல் தனது கண்களை உருட்டி உருட்டி பார்ப்பார். இந்த காணொளியும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அடுத்ததாக, மெக்ஸிகோ அதிபர் என்ரிக் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர் ஒருவர் டிரம்பிடம், இப்போதும் இருநாட்டு எல்லையில் மதில் சுவர் கட்டும் திட்டத்துக்கு மெக்ஸிக்கோதான் பணம் செலுத்த வேண்டுமா ? என்றார். அதற்கு சற்றும் தாமதிக்காமல் பதிலளித்த டிரம்ப், 'நிச்சயமாக' என்றார். டிரம்பின் பதில் சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் ொகூலாக' இருந்தார் என்ரிக்.

ஜி20 உச்சி மாநாட்டில் கேலிக்கு உள்ளான உலகத்தலைவர்களின் காணொளிகள் சமூக ஊடகங்களிலும், மீம்களாலும் பரப்பப்பட்டு வருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்