பாரிஸில் 27 நாள் மழை இரண்டே மணி நேரத்தில்

பிரான்சின் தலைநகர் பாரிஸில் சாதாரணமாக 27 நாட்களில் பெய்யும் மழை, இரண்டே மணி நேரங்களில் பெய்து தீர்த்துவிட்டது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மழை நீர் அருவி போல் கொட்டும் போர்டே டி பண்டின் ரயில் நிலையம்

பாரிஸில் இரண்டு மணிநேரம் வீசிய புயலினால், ஞாயிற்றுக்கிழமை இரவு 54 மிமீ (2.1 இன்ச் ) மழை பெய்தது. இது 27 நாட்களுக்கு பெய்யும் மழைக்குச் சமமானது.

ஒரு மணி நேரத்திற்கு 49.2 மிமீ மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் தலைநகரான பாரிஸில், ஜூலை மாதத்தில் பெய்த மழைகளிலே அதிகபட்ச பொழிவாக இது பதிவாகியுள்ளது.

வெள்ளத்தால் 20 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. பாரிஸ் பயணிகள் திங்கட்கிழமை காலை வேலைக்கு செல்லத் தொடங்கிய நிலையில், இன்னும் பல ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கொட்டும் மழையிலும் அணிவகுப்பு பயிற்சி மேற்கொள்ளும் தீயணைப்புத்துறை வீரர்கள்

சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளும் பலத்த காற்று மற்றும் புயல்களால் தாக்கப்பட்டன. இதனால் இங்கு வார இறுதியில் வெள்ளம் ஏற்பட்டது.

வெள்ளத்தால் 20 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. பாரிஸ் பயணிகள் திங்கட்கிழமை காலை வேலைக்கு செல்லத் தொடங்கிய நிலையில், இன்னும் பல ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன.

சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளும் பலத்த காற்று மற்றும் புயல்களால் தாக்கப்பட்டன. இதனால் இங்கு வார இறுதியில் வெள்ளம் ஏற்பட்டது.

பாரிஸில் ஞாயிறு இரவு 21.00 மணிக்குப் பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. ஜூலை 2, 1995-ம் ஆண்டு பிரான்ஸில் அதிகபட்ச மழையாக 47.7 மிமீ மழை பதிவானது. அதைக் காட்டிலும் தற்போது அதிகளவு மழை பெய்திருக்கிறது என பிரான்ஸ் வானிலை மையம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை வெள்ளம், நிலச்சரிவு: 44 மாணவர்கள் பலி; 8 பேரை காணவில்லை

சோமாலியா: மழை பெய்ய பிரார்த்தனையில் பங்கேற்ற பிரதமர்

தெற்கு தாய்லாந்தில் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு; 12 பேர் பலி

பாரிஸ் மேற்கு மற்றும் சுற்றியுள்ள சில பகுதிகளில் ஞாயிறு பிற்பகல் முதல் திங்கள் காலை 8.00 மணி வரை பெய்த மழை, ஒரு மாத சராசரி மழையின் அளவை விட அதிகமானது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சிவ்ரேயின் மேற்கு பகுதியில் உள்ள கிராமத்தில். 24 மணி நேரத்தில் 86 மி.மீ மழை பெய்திருக்கிறது.

பிற செய்திகள்

அமெரிக்காவிற்குச் செல்லும் மேலும் இரண்டு விமான சேவைகளில் லேப்டாப் தடை நீக்கம்

கேமராவில் பதிவான புலிக்குட்டிகளின் செல்ஃபி

குட்டை பாவாடையும் உகாண்டாவின் ஒழுக்க விதிகளும்!

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்