ஐ எஸ் அமைப்பை விரட்டியடிக்கும் பெண்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஐ எஸ் அமைப்பை விரட்டியடிக்கும் பெண்

ரக்கா நகரிலிருந்து ஐ எஸ் அமைப்பை விரட்டியடிக்கும் படைக்கு பெண் ஒருவர் தலைமையேற்றுள்ளார். மேற்கு முன்னரங்கு பகுதியில் பெண் தளபதி சாங் வின்னின் தலைமையில் மோதல் நடக்கிறது.

அந்தப் படையில் அரபுகள், குர்துகள் மற்றும் இதர தரப்பினர் ஆகியோர் உள்ளனர்.

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கவச வாகனம் ஒன்றிலிருந்து அவரும், சில போராளிகளும் ரக்காவின் மையப்பகுதியை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

நகரின் பழைய பகுதியில் ஐ எஸ் அமைப்பினரை சுற்றி வளைப்பதே அவர்களின் திட்டம்.

தொடர்புடைய தலைப்புகள்