‘சீனாவின் பட்டுப்பாதையால் எமக்கு வளர்ச்சியில்லை’
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

‘சீனாவின் பட்டுப்பாதையால் எமக்கு வளர்ச்சியில்லை’ : கசகஸ்தான்

இரண்டு நூற்றாண்டுகளுக்கு மத்திய ஆசியா ரஷ்யாவின் பின்வாசலாகவே இருந்துள்ளது. சோவியத் யூனியன் சிதறுண்டபோது கசகஸ்தான் சுதந்திரம் பெற்றது. ஆனால் வர்த்தகத்தைப் பொருத்தவரை, ரஷ்ய மொழியே வழக்குமொழியாக இருந்துள்ளது.

ஆனால் இப்போது புதிய பட்டுப்பாதையை சீனா கட்டும் நிலையில் அது மாறுமா எனக் கேள்விகள் எழுந்துள்ளன.

அனைவருக்கும் பயனளிக்கும் வகையிலேயே தமது திட்டங்கள் உள்ளன என்று சீனா கூறுகிறது. ஆனால் திட்டங்களிலுள்ள வேலைகளில் பெரும்பாலானவை சீனர்களுக்கே வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்ல திட்டத்துக்கான கடனும் சீன வடிவமைப்புடன் பின்னிப் பிணைந்துள்ளது.

மத்திய ஆசியாவில் சீனா கட்டுமானங்களை மட்டும் முன்னெடுக்கவில்லை. வங்கிகள் எண்ணெய் வயல்கள் ஆகியவற்றையும் சீனா வாங்குகிறது. உள்ளூர்காரர்கள் இதனால் தமக்கு எப்பயனும் இல்லை என்று கூறுகிறார்கள். இங்குள்ள கிராமம் ஒன்றில் இருந்த மழலையர் பாடசாலை, சீனர்களுக்கான உறைவிடமாக மாறியுள்ளது.

Image caption சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தால் தமக்கு எப்பயனும் இல்லை என்று கசகஸ்தான் மக்கள் கூறுகிறார்கள்.

வெளியாருக்கு வேலைகள் க்கப்படுவது மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து கவலைப்படுகின்றனர் கிராமவாசிகள். ‘சீனர்கள் ஒன்றுமே செய்யவில்லை. இங்கு பெரியளவில் எண்ணெய் தொழில் உள்ளது, ஆனால் இளைஞர்களுக்கு வேலையோ வசதிகளோ இல்லை. எமது கிராமம் குறித்து நாங்கள் அவமானப்படவில்லை, கௌரவமாக நாங்கள் வாழ விரும்புகிறோம்’, என்கிறார் கியாக் என்ற கிராமத்தின் செயல்பாட்டாளர் குபஷேவா.

அரச விதிகள் காரணமாக சீனர்கள் குறித்து பேச கசாக் மக்கள் அச்ச்சப்படுகிறார்கள், ஆனால் தனிப்பட்ட முறையில் சீன நிறுவனங்கள் கையூட்டு வழங்கி வேலையை முடித்துக்கொள்வதாக கூறுகின்றனர்.

சீன மற்றும் ரஷ்யா பில்லியர்ட்ஸ் விளையாடும் மேலையாக கசகஸ்தான் உள்ளது எனும் கவலைகளும் எழுந்துள்ளன. இது குறித்து பேசிய அரசியல் ஆய்வாளரான தோசிம் சட்பயேவ் என்பவர், ‘எமது சுதந்திரத்துக்கு சீனா ஒருவகையில் அச்சுறுத்தலாக இருக்குமோ என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் எம்மை சரிசம்மான பங்குதாரராக சீனா கருதவில்லை. அவர்களின் சர்வதேச அரசியல் விளையாட்டில் கசகஸ்தானும் ஒரு அங்கம்...அவ்வளவே’ என்கிறார்.

ஆனால் இந்த அரசியல் விளையாட்டு காடு மலைகளையெல்லாம் கடந்து வியாபித்துள்ளது. பல இளம் நாடுகளின் தலைவிதி இதன் மூலம் மாற ஆரம்பித்துள்ளது. சீனாவின் நிழலில் அவற்றை மறைத்துவிடும் எனும் கவலைகளும் அச்சங்களும் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள் :

சீனாவின் புதிய பட்டுப்பாதை அனைவருக்குமான ஒரு வாய்ப்பா?

சீனாவின் புதிய பட்டுப்பாதை வெறும் அபிலாஷை திட்டமா?

சீனாவின் பட்டுப்பாதை திட்டம்: உலகை ஆளுமைப்படுத்தும் உள்நோக்கமா?

சீனா உருவாக்கும் புதிய துபாய்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :