சீனாவின் மனித உரிமைப் போராளி லியு ஷியாவ்போ புற்றுநோயால் மரணம்

படத்தின் காப்புரிமை AFP

கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நோபல் பரிசு பெற்ற சீனா எழுத்தாளரும் மனித உரிமைப் போராளியுமான லியு ஷியாவ்போவ், மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவருக்கு வயது 61.

சீனாவின் ஒரு கட்சி அரசை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக மனுக்களை எழுதி, ஆன்லைனில் வெளியிட்டுவந்த குற்றச்சாட்டில், 11 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்தார்.

61 வயதான லீயு, வடகிழக்கு நகரமான ஷென்யாங்கில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சமீபத்தில் மாற்றப்பட்டார்.

மேற்கத்திய அரசாங்கங்களும், உலகெங்கிலும் உள்ள மனித உரிமை அமைப்புக்களும் லியுவை சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சீனாவிடம் முன்வைத்த கோரிக்கைகள் மறுக்கப்பட்டன. அவர் விமானப் பயணம் செய்யும் நிலையில் உடல் நலம் இல்லை என்று சீன அதிகாரிகள் கண்டிப்புடன் கூறிவிட்டனர்.

மிகவும் மதிக்கப்படும் எழுத்தாளரான லியு ஷியாவ்போ, அரசியல் சிந்தனையாளரும் ஆவார்.

படத்தின் காப்புரிமை AFP

1989 இல் தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற ஜனநாயகத்திற்கு ஆதரவான சார்பு போராட்டத்தில் அவர் முக்கிய பங்கேற்பாளர்களில் ஒருவராக இருந்தார்.

பல்கலைக்கழக பேராசிரியராக இருந்து மனித உரிமைப் போராளியாக மாறிய லியு மீது அதிகாரிகள் கிரிமினல் என்ற பட்டம் சுமத்தினார்கள்.

அவரது வாழ்க்கை முழுவதும், மாறி, மாறி சிறையில் அடைக்கப்பட்ட லியு, விடுவிக்கப்பட்ட பிறகு கடும் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டார். மேலும், அவர் விடுதலையான போது, அவரது மனைவி லயு ஷியா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

தியானன்மென் சதுக்கத்தில் போராடியவர்களை விடுவிக்க கோரி போராட்டம் நடத்திய லியு, வடகிழக்கு சீனாவில் உள்ள முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். ஆனால், 1996-ஆம் ஆண்டு கவிஞர் லியு ஷியாவை திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்