ஏடிஎம் எந்திரத்தில் சிக்கிக்கொண்ட நபர், காப்பாற்ற குறிப்பு அனுப்பிய வினோதம்

handwritten note படத்தின் காப்புரிமை KZTV
Image caption வங்கிக்கு வரும் வாடிக்கையாளருக்கு குறிப்பு மூலம் தனது ஆபத்தை வெளிப்படுத்தினார்

ஏடிஎம் எந்திரத்திற்குள் தவறுதலாக மாட்டிக்கொண்ட டெக்ஸாஸ் நபர் ஒருவர், பண விவரம் வழங்கும் தாளில் உதவி குறிப்பு எழுதி அனுப்பிய வினோதம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது

வங்கி ஒன்றின் புதுப்பிக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளர் ஒருவர் தன்னுடைய செல்பேசியை காரிலேயே விட்டுச்சென்று, ஏடிஎம் எந்திரத்திற்குள் சிக்கிக்கொண்டார்.

புதன்கிழமையன்று கார்புஸ் கிறிஸ்டியில் இந்த மனிதர் சிக்கிக்கொண்ட ஏடிஎம் எந்திரத்தில் தொடர்ந்து பணம் எடுத்து கொண்டிருந்த வாடிக்கையாளர்களிடம், தன்னை காப்பாற்றுமாறு பெயர் வெளியிடப்படாத இந்த மனிதர் கத்தியிருக்கிறார். இந்த நபரை வெளியே எடுக்க கதவை உடைக்கும் முன்பு வரை இதுவொரு ஏமாற்றுவேலை என்று காவல்துறையினர் எண்ணியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை KZTV
Image caption இந்த மனிதரின் சத்தத்தை கேட்டதாக கார்புஸ் கிறிஸ்டி காவல்துறை அதிகாரி ரிச்சர்ட் ஓல்டன் தெரிவித்திருக்கிறார்

"அந்த எந்திரத்தில் இருந்து சிறியதொரு சத்தம் வந்ததை எங்களால் கேட்க முடிந்தது. அது நகைச்சுவை என்று எல்லாரும் எண்ணிக்கொண்டிருந்தோம்" என்று காவல்துறை அதிகாரி ரிச்சர்ட் ஓல்டன் தெரிவித்திருக்கிறார்.

இந்த எந்திரத்தில் சிக்கிக்கொண்ட நபரே எழுதி, ஆட்கள் எடுக்கின்ற பண விவர ரசீது அனுப்பப்படும் பாதை வழியாக வாடிக்கையாளருக்கு அனுப்பப்பட்ட குறிப்பில், "தயவுசெய்து உதவவும். இங்கு நான் சிக்கியுள்ளேன். என்னுடைய தொலைபேசியும் இப்போது என்னிடம் இல்லை. என்னுடைய மேலதிகாரியை அழைக்கவும்" என்று எழுதியிருந்தது. அந்த நபருக்கு வேலை வழங்கியவரின் செல்பேசி எண்ணும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமெரிக்க வங்கியின் இந்த ஏடிஎம் எந்திரத்தில் சிக்கிக்கொண்ட 2 மணிநேரத்திற்கு மேலான பின்னர்தான் இந்த நபர் வெளியே மீட்கப்பட்டார்.

"அனைவரும் நன்றாகவே உள்ளனர். ஏடிஎம் எந்திரத்திற்குள் ஒருவர் சிக்கிக்கொள்வதை நீங்கள் வாழ்க்கையில் பார்த்திருக்க முடியாது. இது பைத்தியகாரத்தனம் போன்று தோன்றியது" என்று அதிகாரி ஓல்டன் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த காவலர்கள் இந்த எந்திரத்தை உடைத்து அவரை வெளியே எடுத்துள்ளனர்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்