வரலாற்றுப் பதிவுக்காக நிர்வாண நீச்சல் (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
நீரில் நிர்வாணமாக நீச்சல் அடிக்க ஓடிய பங்கேற்பாளர்கள்

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஆடைகளின்றி நிர்வாணமாக நீச்சலடிப்பதில் உலக சாதனையை முறியடிக்கும் ஒரு முயற்சியில் ஃபின்லாந்தில் நூற்றுக்கணக்கான நீச்சல் வீரர்கள் ஆடைகளின்றி நிர்வாணமாக தண்ணீரில் நீந்தியுள்ளனர்.

கிழக்கு ஃபின்லாந்தில் நடைபெற்ற இசைத்திருவிழா ஒன்றில் பங்கேற்ற சுமார் 789 பேர் சனிக்கிழமை நிர்வாண நீச்சலில் ஈடுபட்டதாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

முன்பு ஆஸ்திரேலியாவில் இதே போன்று நடத்தப்பட்ட உலக சாதனையை ஒப்பிடும் போது, இந்த நிகழ்வில் வெறும் மூன்று நீச்சல் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த சாதனையை கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உறுதிப்படுத்த காத்திருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சாதனையை முயற்சிக்கும் நாடுகளில் ஃபின்லாந்து மூன்றாவது நாடாகும் என்று யேல் செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்