ரஷ்யாவை தண்டிக்க புதிய சட்டத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு கட்சிகளும் ஒப்புதல்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜி20 உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்த குற்றச்சாட்டில், அந்நாட்டை தண்டிக்கும் விதமாக புதிய தடை உத்தரவுகளை பிறப்பிக்க உதவும் சட்டம் ஒன்றிற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள இரு கட்சிகளின் தலைவர்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய சட்டம் ரஷ்யாவுக்கு எதிரான எந்தவொரு தடை உத்தரவுகளை நீக்கும் அதிபர் டொனால்ட் டிரம்பின் அதிகார வரம்பையும் கடுமையாக கட்டுப்படுத்தும்.

ரஷ்யாவுடன் ராஜிய ரீதியாக சுதந்திரமாக செயல்பட தனக்கு அதிகாரம் வேண்டும் என்று டிரம்ப் முன்னர் தெரிவித்திருந்தார்.

தேர்தல் தலையீடு குறித்த குற்றச்சாட்டை ரஷ்யா நிராகரித்து வந்தாலும், டிரம்ப் பிரசார அணியை சேர்ந்த யாரேனும் ரஷ்யா அதிகாரிகளுடன் ரகசியமாக தொடர்பு வைத்துள்ளார்களா என்பது குறித்து பல அமெரிக்க விசாரணைகள் ரஷ்ய அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அதிபர் டிரம்பின் பார்வை என்னவாக இருந்தாலும், ரஷ்யாவுக்கு எதிராக ஒரு உறுதியான நிலைப்பாட்டை காக்க வேண்டும் என்ற நாடாளுமன்றத்தின் உறுதியை இந்த இரு கட்சி ஒப்பந்தம் சுட்டிக்காட்டுவதாக உள்ளது என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த சட்ட மசோதா மீது அதிபர் டிரம்ப் தன் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த முடியும், ஆனால் அவர் அவ்வாறு செய்தால் அதிபர் ரஷ்யாவுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார் என்ற சந்தேகத்திற்கு மேலும் வலுசேர்ப்பதாக அமைந்திவிடும் என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

மற்றொரு பக்கம், இந்த சட்டத்தை அமல்படுத்த அவர் கையெழுத்திட்டால், அவரது நிர்வாகம் எதிர்க்கும் சட்டத்தை வலுக்காட்டாயமாக திணிப்பதை போன்று தோன்றும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்