Huge blaze on stage at Spanish music festival
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஸ்பெயின் இசைத் திருவிழாவில் பெரும் தீவிபத்து

மைய மேடையின் ஒரு பகுதி தீ பற்றி எரிந்ததால், ஸ்பெயினில் நடைபெற்ற இசைத்திருவிழாவில் கலந்து கொண்ட 22,000-க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பார்சிலோனாவிற்கு அருகிலுள்ள டுமாரோலேண்ட் யுனைட் ஃபெஸ்டிவல் விழாவின் மேடையின் இடது புறம் தீ பிடித்து எரிவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளன.

இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக, விழாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ள விழா ஒருங்கிணைப்பாளர்கள்,இது தவிர வேறு எந்த தகவலையும் வெளியிடவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்