CCTV shows man tackle bank robber
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வங்கிக்கு ஆயுதத்தோடு வந்த கொள்ளையன்: என்ன நடந்தது?

லண்டனில் வங்கியை கொள்ளையடிக்க ஆயுதத்தோடு வந்த கொள்ளையனை பொது மக்களில் ஒருவர் சண்டையிட்டு மடக்கி பிடிக்க முயற்சித்த கண்காணிப்பு கேமரா காணொளியை லண்டன் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

மார்ச் 10 ஆம் தேதி லண்டனின் தென் மேற்கிலுள்ள டெடிங்டனிலுள்ள வங்கி ஒன்றின் ஊழியரை ஆயுதம் கொண்டு பயமுறுத்திய திருடனை அந்த வங்கிக்கு வந்திருந்த ஒருவர் மடக்கி பிடிக்க முயற்சித்தார்.

பணத்தை எடுக்க கோரிய அந்த திருடனை அந்த மனிதர் மடக்கி பிடிக்க முயற்சித்தார். ஆனால், சிறியதொரு சண்டைக்கு பின்னர் அந்த திருடன் தப்பிவிட்டார்.

வயதுவந்தோருக்கான மலையேறும் பைக்கில் வங்கிக்கு வந்திருந்த உள்ளூர் பகுதியில் வாழும் அந்த திருடன், 150 யூரோவோடு அவ்விடத்தை விட்டு தப்பிவிட்டார்.

மெட்ரோபோலிடன் போலீஸார் இவரை பற்றிய தகவல்களை 101 எண்ணுக்கு அழைத்து தெரிவிக்க பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்