ஐஃபோன் மட்டுமல்லாமல் பிற செல்பேசிகளிலும் இணையும் ஆப்பிள் வாட்ச் தயாரிப்பு

ஆப்பிள் நிறுவனம், ஐஃபோனோடு மட்டுமே இணைக்கப்படாமல் பிற செல்பேசிகளிலும் இணைக்கப்படும் வகையிலான ஆப்பிள் கைக்கடிகாரத்தை தயாரித்து வருகிறது.

படத்தின் காப்புரிமை Spencer Platt/Getty Images

இவ்வாறு ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் கைக்கடிகாரம் 4ஆம் தலைமுறை என்று கூறப்படும் நீண்டகால பரிணாம செல்பேசி வலையமைப்புகளில் நேரடியாக இணையும் வகையில் இருக்கும் என்று புளூம்பர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டின் இறுதியில், இந்த கருவியை தயாரித்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கு விநியோகிக்க இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

2015 ஆம் ஆண்டு ஆப்பிள் கடிகாரத்தை வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம் அதன் விற்பனை விவரங்களை இன்னும் வெளியிடவில்லை.

உலகிலேயே விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட் கடிகாரங்களில் சிறந்த அளவில் விற்பனையாவது தன்னுடைய நிறுவனத்தின் ஆப்பிள் கைக்கடிகாரம்தான் என்று இந்த நிறுவனத்தின் முதலாளி டிம் குக் முதலீட்டளர்களிடம் சமீபத்தில் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Justin Sullivan/Getty Images

"ஸ்ராட்டெஜி அனலிட்டிக்ஸ்" ஆய்வுப்படி, பரந்த பலதரப்பட்ட சந்தையில், சியாவ்மி மற்றும் சான்பிரான்சிஸ்கோவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஃபிட்பிட் ஆகியவற்றைவிட ஆப்பிள் பின்தங்கி இருப்பதாக தெரிகிறது.

இன்டெல் மோடம்

தொடக்கத்தில் சொகுசானதொரு கருவியாக இருந்த ஆப்பிள் கைக்கடிகாரம், சமீபத்தில் அதனுடைய உடற்பயிற்சி கூறுகளில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.

ஐஃபோனில் மட்டுமே என்பதில் இருந்து மாறி, பிற செல்பேசிகளுடன் இணைவது என்பது புதிய செயல்பாட்டு தளத்தை உருவாக்கும்.

ஸ்மார்ட் செல்பேசியை கொண்டிராவிட்டாலும், எங்காவது சென்று கொண்டிருக்கும்போதே பாடல்களை தரவிறக்கம் செய்வது போன்ற வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் கடிகாரம் வழங்கும்.

சுகாதார பிரிவு மற்றும் வலையமைப்பு தாயகத்தோடு தொடர்பு கொள்ளும் வழிமுறை ஆகிய இரண்டிலும், ஆப்பிள் மிகவும் தெளிவான பெரிய திட்டங்களை கொண்டிருப்பதாக "கிரியேட்டிவ் ஸ்ராட்டெஜிஸ்"-யின் வாடிக்கையாளர் தொழில்நுட்ப ஆய்வாளர் கரோலினா மிலானேஸி தெரிவித்திருக்கிறார்,

படத்தின் காப்புரிமை Getty Images

"நேரடி வலையக இணைப்பு தரவுகளை நம்பிக்கையுடனும், விரைவாகவும் பகிர்ந்து கொள்ள உதவுகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த கருவியின் பேட்டரி எவ்வளவு தாக்குப்பிடிக்கும் என்ற சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. தற்போதைய ஆப்பிள் கடிகாரத்தில் பெரும்பாலான கணக்கீட்டு கனரக தூண்டுதல் அதனுடன் இணைக்கப்படும் ஐஃபோனில் தான் நடைபெறுகிறது.

இந்த புதிய கருவியின் மோடம் இன்டெல் நிறுவனத்தால் செய்யப்படும் என்று புளூம்பர்க்கின் அறிக்கை தெரிவிக்கிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களான சாம்சங் மற்றும் எல்ஜி ஆகியவை தங்களுடைய செல்பேசிகளால் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் கடிகாரங்களை வெளியிட்டு பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த கருவி சந்தைக்கு வருகிறது.

இருப்பினும், அந்த கருவிகளில் அனைத்தாலும் மைய நீரோட்டத்தில் பிரபலமடைய முடியவில்லை.

இதுதொடர்பில்,வெள்ளிக்கிழமையன்று பிபிசி எழுப்பிய சந்தேகங்களுக்கு ஆப்பிள் பதிலளிக்கவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்