பெண் ஊழியர்களுக்கு 'ஆணுறுப்பு' புகைப்படத்தை அனுப்பிய செய்தி தொகுப்பாளர் இடைநீக்கம்

பாக்ஸ் நியூஸ் தொகுப்பாளர் இடைநீக்கம் படத்தின் காப்புரிமை Getty Images

முன்று சக பெண் ஊழியர்களுக்கு ``ஆணுறுப்பு புகைப்படத்தை`` அனுப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஒரு தொகுப்பாளரை, அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் நிறுவனம் இடைநீக்கம் செய்துள்ளது.

ஃபாக்ஸ் நியூஸில் நீண்ட காலமாக தொகுப்பாளராக இருந்த எரிக் போலிங், பல ஆண்டுகளுக்கு முன்பு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இந்த ஆபாச செய்தியை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

எரிக்கின் வழக்கறிஞர் இந்தக் கூற்றுக்களை "பொய் மற்றும் நியாயமற்றது" என்று விவரித்துள்ளார். இந்நிலையில், இது குறித்து விசாரணை நடந்து வருவதாக ஃபாக்ஸ் நியூஸ் கூறியுள்ளது.

மூன்று சக பெண் ஊழியர்களுக்கு ஆணுறுப்பு புகைப்படத்தினை குறுந்தகவல் மூலம் எரிக் அனுப்பியதாக, 14 பெயரிடப்பாதவர்களின் மேற்கோள்களைக் குறிப்பிட்டு ` தி ஹஃபிங்டன் போஸ்ட்` நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

``விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க நாங்கள் விரும்புகிறோம். அதனால், விசாரணை விரைவாக முடிவதுடன், எரிக்கால் முடிந்தவரை விரைவாக வேலைக்குத் திரும்ப முடியும்``என அவரது வழக்கறிஞர் கூறுகிறார்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்