பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கியச் செய்திகள்

பிபிசி தமிழ் பக்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகியுள்ள முக்கியச் செய்திகளின் தொகுப்பு இது.

பள்ளிக்கல்வித் துறையின் செயலாளரான ஐ.ஏ.எஸ் அதிகாரி உதயசந்திரன் அந்தப் பொறுப்பிலிருந்து மாற்றப்படலாம் என தமிழக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுவருவது தொடர்பாக அரசியல் கட்சிகளும் கல்வித் துறை ஆர்வலர்களும் கவலைகளைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க, கீழே கிளிக் செய்யவும்...

அரசியல் நெருக்கடியால் பள்ளிக்கல்வித்துறை செயலரை மாற்ற முயற்சியா?

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆறு மாதங்களில் ஒரு முறை கூட தனது மக்களவை தொகுதியான அமேதி தொகுதிக்கு செல்லாத நிலையில் அவரைக் காணவில்லை எனக் குறிப்பிடும் சுவரொட்டிகள் அமேதியில் ஒட்டப்பட்டுள்ளன.

மேலும் படிக்க, கீழே கிளிக் செய்யவும்...

டிவிட்டரில் வைரலாகும் "ராகுலை காணவில்லை" சுவரொட்டிகள்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிவரும் 'பிக் பாஸ்' எனப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சி, கடந்த ஆகஸ்ட் 5-ஆம்தேதியன்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல் ஹாசனின் எச்சரிக்கையுடன் தொடங்கியது.

மேலும் படிக்க, கீழே கிளிக் செய்யவும்...

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், சமூக பொறுப்பும்: 'பிக் பாஸ்' கிளப்பிய சர்ச்சை

ஆண் - பெண் சமத்துவத்தை அதிகரிக்க கூகுள் மேற்கொள்ளும் முயற்சிகளை விமர்சனம் செய்த ஊழியரை, அந்த நிறுவனம் பணிநீக்கம் செய்திருப்பதை பிபிசி உறுதி செய்துள்ளது.

மேலும் படிக்க, கீழே கிளிக் செய்யவும்...

ஆண் - பெண் சமத்துவத்தை விமர்சித்த ஊழியரை பணிநீக்கம் செய்தது கூகுள்

உலகின் பல நாடுகளில் தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கைகளும், மோதல்களையும் பார்க்கமுடிகிறது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் வசிக்கும் பலூச் மக்கள், 'பலுச்சிஸ்தான்' என்ற தனிநாடு வேண்டும் என்று விரும்புகின்றனர். பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் வசிக்கும் பட்டான் சமூகத்தினர், 'பக்தூனிஸ்தான்' கோருகின்றனர்.

மேலும் படிக்க, கீழே கிளிக் செய்யவும்...

தனிநாடு கேட்கும் உரிமை யாருக்கு இருக்கிறது?

ஆஸ்திரேலியாவின் பிரபல கடற்கரையில் கால்களை நனைத்த சிறுவனின் கால்களில் ரத்தம் வழிந்ததற்கான காரணம் என்ன?

மேலும் படிக்க, கீழே கிளிக் செய்யவும்...

கடல் பூச்சிகள் கடித்த ஆஸ்திரேலிய சிறுவனின் கால்களில் ரத்தம் கொட்டியது ஏன்?

படத்தின் காப்புரிமை JARROD KANIZAY
Image caption JAROD KANIZAY

மேற்கிந்தியத் தீவுகளின் ஆண்டிகுவாவில் செயிண்ட் ஜான்ஸ் நகரில் வண்ணமயமான கட்டிடங்களுக்கு மத்தியில் ஒரு பழைய கடையில் கலைஞர்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க, கீழே கிளிக் செய்யவும்...

'காகிதங்கள், அட்டைகள், கம்பிகள்' - இவற்றை கொண்டும் ஆடை அலங்காரம்!

யூ டியூபில் குழந்தைகள் பாதுகாப்பை நிர்வகிக்கும் அமைப்பு தோல்வியடைந்து விட்டதாக அந்த நிறுவனத்தின் தன்னார்வ கண்காணிப்புக்குழுக்கள் தெரிவித்துள்ளன.

மேலும் படிக்க, கீழே கிளிக் செய்யவும்...

'யூ டியூபின் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு தோல்வியடைந்துள்ளது`

இலங்கையில் அம்பாந்தோட்டை பிரதேசத்திலுள்ள காடு ஒன்றில் வாயிலும் தலையிலும் துப்பாக்கிச்சூட்டு காயமுற்ற காட்டு யானையை காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் வன உயிரின இலாகா அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க, கீழே கிளிக் செய்யவும்...

இலங்கை: காயமுற்ற யானையை காப்பாற்றிய வன உயிரின இலாகா அதிகாரிகள்

தனது மார்பகங்களை தானே பாராட்டிக் கொள்ளும் காணொளி ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதற்காக, `லூஸ் வுமன்` என்ற வெளிநாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான ஸ்டேசி சாலமோனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மேலும் படிக்க, கீழே கிளிக் செய்யவும்...

தனது தளர்ந்த மார்பகங்களை புகழ்ந்து காணொளி வெளியிட்ட டி.வி. பிரபலம்

படத்தின் காப்புரிமை @STACEYSOLOMON
Image caption @STACEYSOLOMON

முன்று மாகாண சபைகளுக்கு நடத்தப்படும் தேர்தலை தள்ளிப்போடுவதற்கும், தற்போது மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பறித்து அவற்றை நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கும் நோக்கத்துடனும், அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள அரசியல் சாசனத்தின் 20வது திருத்தத்தை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யப் போவதாக தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

மேலும் படிக்க, கீழே கிளிக் செய்யவும்...

இலங்கையில் மாகாண அதிகார பறிப்புக்கு எதிராக வழக்கு தொடர திட்டம்

இலங்கையில் கல்வி பொதுத் தராதர உயர்தர பரிட்சைக்கு வரும்முஸ்லிம் மாணவிகள் தங்கள் கலாசார ரீதியான சீருடையில் பரிட்சை எழுதுவது தொடர்பில் எவ்விதமான தடைகளும் இல்லை என அரசு பரிட்சைகள் தினைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க, கீழே கிளிக் செய்யவும்...

இலங்கை : தேர்வு எழுதும் முஸ்லிம் மாணவிகள் முகத்தை மறைக்க தடை

வடகொரிய நடவடிக்கைகளை கண்காணித்து வரும் எல்லையில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் ஒன்றுக்கு செல்ல பிபிசிக்கு அரிய வாய்ப்பு கிடைத்தது. அது தொடர்பான காணொளி செய்தி இது.

மேலும் காண, கீழே கிளிக் செய்யவும்...

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வடகொரியாவை உளவு பார்க்கும் அமெரிக்க விமானங்கள்

உலக அளவில் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துகொள்வோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. அவற்றில் பெரும்பாலான அறுவைச் சிகிச்சைகளுக்கு மருத்துவ தேவை கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. அது பற்றிய காணொளி செய்தி.

மேலும் செய்தியைக் காண, கீழே கிளிக் செய்யவும்...

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சிசேரியன் அறுவை சிகிச்சையை நாடும் துருக்கியப் பெண்கள்

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :