பிபிசி தமிழில்...... இன்று வெளியான முக்கியச் செய்திகள்

படத்தின் காப்புரிமை படத்தின் காப்புரிமைPALAK SHARMA‏

பிபிசி தமிழில் இன்று (புதன்கிழமை) வெளியான முக்கியச் செய்திகளின் தொகுப்பு இது.

நடிகர் விஜயின் திரைப்படத்தை விமர்சித்த பெண் பத்திரிகையாளருக்கு தொடரும் தாக்குதல்

நடிகர் விஜயின் திரைப்படங்கள் குறித்தும் அவரது நடிப்பு குறித்தும் டிவிட்டரில் கருத்துத் தெரிவித்த `தி நியூஸ் மினிட்' பத்திரிகையின் ஆசிரியர் தன்யா ராஜேந்திரன் மீது டிவிட்டரில் ஆபாச சொற்களால் தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவுசெய்துள்ளது.

இந்தச் செய்தியைப் படிக்க: நடிகர் விஜயின் திரைப்படத்தை விமர்சித்த பெண் பத்திரிகையாளருக்கு தொடரும் தாக்குதல்

நாடாளுமன்றத்தில் தமிழில் பேசிய தம்பிதுரை: 'புரியவில்லை' என வட மாநில எம்.பி..க்கள் கூச்சல்

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் அதன் துணைத் தலைவரும் அதிமுக உறுப்பினருமான தம்பிதுரை இன்று (புதன்கிழமை) தமிழில் பேசியபோது, மொழி புரியவில்லை என்று வட மாநிலங்களைச் சேர்ந்த மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.

இந்தச் செய்தியைப் படிக்க: நாடாளுமன்றத்தில் தமிழில் பேசிய தம்பிதுரை: 'புரியவில்லை' என வட மாநில எம்.பி..க்கள் கூச்சல்

படத்தின் காப்புரிமை Getty Images

நள்ளிரவில் வெளியே போகக்கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார்?: கொதிக்கும் பெண் இணையவாசிகள்

இந்தியாவில் உள்ள பெண்கள் சமூக ஊடகங்களில் தாங்கள் இரவு நேரத்தை எவ்வாறு மகிழ்ச்சியுடன் செலவிடுகின்றனர் என்பதை #AintNoCinderella என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.

இந்தச் செய்தியைப் படிக்க: இரவில் பெண்கள் வெளியே நடமாட தடை போடும் தைரியம் யாருக்கு?

அமெரிக்காவின் பசிபிஃக் பிராந்தியத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்த பரிசீலினை: மிரட்டும் வட கொரியா

அமெரிக்க பசிபிஃக் பிராந்தியமான குவாமில் ஏவுகணை தாக்குதல்களை நடத்த பரிசீலித்து வருவதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தச் செய்தியைப் படிக்க: அமெரிக்காவின் பசிபிஃக் பிராந்தியத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்த பரிசீலினை: மிரட்டும் வட கொரியா

செளதியின் `ரகசிய' செயலி: தகவல் அனுப்பியவரின் அடையாளம் தெரியாது

செளதி அரேபியாவின் 'செய்தி செயலி' சராஹா, ஒரே மாதத்தில் 30 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் படிக்க: செளதியின் `ரகசிய' செயலி: தகவல் அனுப்பியவரின் அடையாளம் தெரியாது

இலங்கையிலுள்ள ரோஹிஞ்சா முஸ்லிம்களைத் தனி இடத்தில் பராமரிக்க நீதிமன்றம் அனுமதி

இலங்கையில் சட்ட விரோதக் குடியேற்றகாரர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோகிஞ்சா முஸ்லிம்களை, முகாமுக்கு வெளியே தங்க வைத்துப் பராமரிக்க நீதிமன்றத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் படிக்க: ரோஹிஞ்சா முஸ்லிம்களை தனி இடத்தில் பராமரிக்க இலங்கை நீதிமன்றம் அனுமதி

பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா; இலங்கை அரசு மருத்துவர் மீது வழக்கு

அனுராதபுர அரச வைத்திய சாலையில் கணக்காய்வாளர் பிரிவில் அமைந்துள்ள பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட கழிவறையில் ரகசிய கேமராவோன்றை பொருத்திய அரசு மருத்துவர் ஒருவருக்கு எதிராக போலீசார் அனுராதபுர மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இந்தச் செய்தியைப் படிக்க: பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா; இலங்கை அரசு மருத்துவர் மீது வழக்கு

கடத்தப்பட்ட பிரபல மாடல்

பிரபல பிரிட்டன் மாடலான கிலோய் அய்லிங், இத்தாலியில் சில மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். அதன் பிறகு அவருக்கு என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இக்காணொளி.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கடத்தப்பட்ட பிரபல மாடல்: என்ன நடந்தது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்