பிபிசி தமிழில் இன்று வெள்ளிக்கிழமை வெளியான முக்கிய செய்திகள்

இன்று (வெள்ளிக்கிழமை) பிபிசி தமிழில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

வடகொரியாவை சந்திக்க அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளது: டிரம்ப் எச்சரிக்கை

படத்தின் காப்புரிமை Reuters

வட கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான பனிப்போரை மேலும் தீவிரமாக்கும் வகையில், வட கொரியாவை சமாளிக்க அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளதாக அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

செய்தியை வாசிக்க: வடகொரியாவை சந்திக்க அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளது: டிரம்ப் எச்சரிக்கை

உத்தரப்பிரதேசத்தில் ஒரே மருத்துவமனையில் 20 குழந்தைகள் பலி: குழப்பமான காரணங்கள்

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்திலுள்ள பிஆர்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுமார் 20 குழந்தைகள் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் முறையான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

இந்த செய்தியை வாசிக்க: உத்தரப்பிரதேசத்தில் ஒரே மருத்துவமனையில் 20 குழந்தைகள் பலி

சினிமா விமர்சனம் : பொதுவாக எம்மனசு தங்கம்

உதயநிதி ஸ்டாலின் இதுவரை 7 படங்களில் கதாநாயகனாக நடித்துவிட்டார். மனிதன் தவிர, பிற படங்கள் எல்லாமே ஜாலியான, நகைச்சுவை நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படங்கள்.

திரை விமர்சனத்தை வாசிக்க: சினிமா விமர்சனம் : பொதுவாக எம்மனசு தங்கம்

யார் "420"? எடப்பாடி பழனிசாமி - டிடிவி தினகரன் பரஸ்பரம் குற்றச்சாட்டு

அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் "420" என பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டனர்.

செய்தியை வாசிக்க: யார் "420"? எடப்பாடி பழனிசாமி - டிடிவி தினகரன் பரஸ்பரம் குற்றச்சாட்டு

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: குற்றவாளிகள் விடுவிப்புக்கு அதிர்ச்சி, கண்டனம்

கடந்த 2004ஆம் ஆண்டு கும்பகோணத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில், குற்றவாளிகள் அனைவரையும் சென்னை உயர் நீதிமன்றம் விடுவித்ததற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

செய்தியை வாசிக்க: கும்பகோணம் பள்ளி தீ விபத்து: குற்றவாளிகள் விடுவிப்புக்கு அதிர்ச்சி, கண்டனம்

`கருணாநிதி என்ற ஆளுமையின் அம்சமாக விளங்கிய முரசொலி'

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அந்த நாளிதழின் இத்தனை ஆண்டுகாலப் பயணத்தை விளக்கும் வகையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கும் கண்காட்சியின் சிறம்பம்சங்கள் என்ன? தி.மு.கவின் அரசியல் நிலைப்பாடுகள், கொள்கைகள், போன்றவற்றை தொண்டர்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்ததில் முரசொலியின் பங்கு என்ன?

செய்தியை படிக்க:கட்சிக்கு அப்பாற்பட்டு முரசொலி நாளிதழின் சமூக பங்கு என்ன?

பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உதயசந்திரனை இடமாற்றம் செய்ய இடைக்காலத் தடை

பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உதயசந்திரனை இடமாற்றம் செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தமிழக பள்ளிக்கூடங்களின் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் குழுவில் உள்ளவர்களையும் மாற்றக்கூடாது எனவும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

செய்தியை படிக்க:பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உதயசந்திரனை இடமாற்றம் செய்ய இடைக்காலத் தடை

கேம்-கேர்ள்ஸ் - ரூமேனியாவின் இணையவழிப் பாலியல் தொழில்: உள்ளே நடப்பது என்ன?

படத்தின் காப்புரிமை Getty Images

சர்வதேச அளவில் ஆபாசப் படத் துறையில் வெப் கேமராக்கள் வழியாக பாலியல் ரீதியாக உறவாடுவது இப்போது மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. ரூமேனியாவில் "கேம் கேர்ள்ஸ்" (cam-girls) என்று அழைக்கப்படும் ஆயிரக்கணக்கான பெண்கள் இணைய வழியாக வாடிக்கையாளர்களுடன் உறவாடுகின்றர்.

செய்தியை படிக்க: ரூமேனியாவின் இணையவழிப் பாலியல் தொழில்: உள்ளே நடப்பது என்ன?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :