பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கிய செய்திகள்

இன்று (வியாழக்கிழமை) பிபிசி தமிழில் வெளியான செய்திகளில் முக்கியமானவற்றை தொகுத்து வழங்கியுள்ளோம்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஆணையம் அமைத்தது

படத்தின் காப்புரிமை ARUN SANKAR

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

செய்தியை படிக்க:ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் - தமிழக அரசு அறிவிப்பு

முஸ்லிம் மாணவர்களுக்கு உதவிய பௌத்த மதகுரு

இலங்கையில் பௌத்த மதகுரு ஒருவர் தனது சொந்த நிதியில், அரசு முஸ்லிம் பள்ளி ஒன்றுக்கு மூன்று மாடிக் கட்டடத் தொகுதியை நிர்மாணித்துக் கொடுத்துள்ளார்.

செய்தியை படிக்க:முஸ்லிம் மாணவர்களுக்கு உதவிய பௌத்த மதகுரு

விசாரணைக்கு அப்பல்லோ மருத்துவமனை வரவேற்பு

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை, ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த அப்பல்லோ மருத்துவமனை வரவேற்றுள்ளது.

செய்தியை படிக்க:ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு அப்பல்லோ மருத்துவமனை வரவேற்பு

காதலரை திருமணம் செய்தார் இரோம் ஷர்மிளா

மணிப்பூர் மாநிலத்தில் சிறப்பு ஆயுதப் படை சட்டத்தை எதிர்த்துப் போராடி வந்த இரோம் ஷர்மிளா, தனது நீண்ட நாள் தோழரான அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த டெஸ்மாண்ட் அந்தோணி ஹட்டின்ஹோவை கொடைக்கானலில் பதிவுத் திருமணம் செய்துகொண்டார்.

செய்தியை படிக்க: காதலரை திருமணம் செய்தார் இரோம் ஷர்மிளா

அன்னாபெல் கிரியேஷன் படம் எப்படி உள்ளது?

படத்தின் காப்புரிமை ANNABELLE: CREATION

2014ல் வெளிவந்த அன்னாபெல் படத்திற்கு முன்பாக என்ன நடந்தது என்பதைச் சொல்லும் படம் இது. பலவகையில் முதல் பாகத்தைவிட மேம்பட்ட படம்.

செய்தியை படிக்க:சினிமா விமர்சனம்: அன்னாபெல் கிரியேஷன்

கேரட் உதவியால் கிடைத்த மோதிரம்

படத்தின் காப்புரிமை SUBMITTED PHOTO

வைரத்தின் எடையை கேரட் என்னும் அலகால் மதிப்பிடுவது வழக்கம். கனடா நாட்டுப் பெண்மணி மேரி கிராம்ஸ் 13 ஆண்டுகளுக்கு முன்பு தொலைத்த மோதிரத்தில் இருந்த வைரம் எத்தனை கேரட் என்பது தெரியாது. ஆனால், எதிர்பாராத ஆச்சரியமாக அந்த வைர மோதிரத்தை மீட்டுத் தந்திருக்கிறது ஒற்றை கேரட்.

செய்தியை படிக்க:13 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன வைர மோதிரத்தை தேடித் தந்தது கேரட்

மாணவர் போராட்டத்தால் மூடப்பட்ட பல்கலைக்கழகம்

மாணவர் போராட்டத்தால் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதால் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகம் வியாழக்கிழமை முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.

செய்தியை படிக்க:இலங்கை கிழக்கு பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடல்

பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ள சிறுமி

படத்தின் காப்புரிமை iStock

இந்தியாவில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட 10 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமடைந்திருந்த நிலையில் அவருக்கு கருக்கலைப்பு செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது, அச்சிறுமி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

செய்தியை படிக்க: பாலியல் வல்லுறவுக்குள்ளான 10 வயது சிறுமி 'தாயானார்'

தமிழர் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்ட கேரள முதல்வர்

படத்தின் காப்புரிமை CMO KERALA

மருத்துவ உதவி மறுக்கப்பட்டதால் கேரளாவில் மரணமடைந்த தமிழக தொழிலாளி முருகனின் குடும்பத்தாரிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் மன்னிப்புக் கோரியுள்ளார்.

செய்தியை படிக்க:மருத்துவ உதவி மறுக்கப்பட்டதால் இறந்த தமிழர் குடும்பத்துக்கு கேரள முதல்வரின் உதவி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்