பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கிய செய்திகள்

பிபிசி தமிழில் இன்று (திங்கள்கிழமை) வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை AIADMK

அரசு கேபிள் ஒளிபரப்பில் ஜெயா தொலைக்காட்சி குழும சானல்கள் இருட்டிப்புச் செய்யப்படுவதாக அந்நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. இந்நிறுவனங்களை கைப்பற்றப்போவதாக எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. கூறியிருப்பது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

செய்தியை படிக்க: 'அரசு கேபிள் டிவியில் இருட்டடிப்பு' - ஜெயா தொலைக்காட்சி குற்றச்சாட்டு

படத்தின் காப்புரிமை NALSA.GOV.IN

இந்திய உச்ச நீதிமன்றத்தின் 45-ஆவது தலைமை நீதிபதியாக இன்று (திங்கள்கிழமை) பதவியேற்றுக் கொண்டார் நீதிபதி தீபக் மிஸ்ரா. புதிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் 5 முக்கிய தீர்ப்புகள் என்னென்ன?

செய்தியை படிக்க:உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் 5 முக்கிய தீர்ப்புகள்

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கன மழையுடன் ஹார்வி புயல் புரட்டி எடுத்து வரும் நிலையில், ஹுஸ்டன் நகரையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கிய சுமார் 2000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். பேரழிவை ஏற்படுத்திய இந்த வெள்ளம் குறித்த புகைப்படத் தொகுப்பு இது.

புகைப்படங்களை பார்க்க: பேரழிவை உண்டாக்கிய ஹார்வி புயல் (புகைப்படத் தொகுப்பு)

தமிழகத்தின் ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.க-வின் செயற் குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டம் செப்டம்பர் 12-ஆம் தேதி கூடும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பிரிவு அறிவித்துள்ளது.

செய்தியை படிக்க: செப்டம்பர் 12ல் கூடுகிறது அ.தி.மு.கவின் பொதுக்குழு, செயற்குழு

படத்தின் காப்புரிமை Getty Images

பாலியல் வல்லுறவு வழக்கில் ஹரியானா சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையை இந்திய நீதிமன்றம் இன்று விதித்துள்ளது.

இந்த செய்தியை படிக்க: பாலியல் வல்லுறவு வழக்கில் ஹரியானா சாமியாருக்கு 10 ஆண்டுகள் சிறை

படத்தின் காப்புரிமை AFP

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த பிரச்சனைக்குரிய டோக்லாம் பகுதியில் இருந்து இரு நாட்டு படைகளையும் பரஸ்பரம் திரும்பப் பெற இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன.

இந்த செய்தியை படிக்க: டோக்லாம் பகுதியில் படைகளை வாபஸ் பெற இந்தியா - சீனா ஒப்புதல்

படத்தின் காப்புரிமை HONEYPREETINSAN.ME

"தேரா சச்சா செளதா" அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளி என ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.

இந்த செய்தியை படிக்க: ஹரியானா சாமியாருடன் உள்ள பெண் யார்?

டிடிவி தினகரன் வெளியிடும் நியமன அறிவிப்புகள், பதவி நீக்க அறிவிப்புகள் செல்லாது என்றும், விரைவில் பொதுக் குழு மற்றும் செயற்குழுவை கூட்டவிருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க பிரிவு அறிவித்திருக்கிறது.

இந்த செய்தியை படிக்க: 'நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டிவி மீட்கப்படும்'

படத்தின் காப்புரிமை Reuters

டெக்சாஸ் மாகாணத்தில் கன மழையுடன் ஹார்வி புயல் புரட்டி எடுத்து வரும் நிலையில், ஹுஸ்டன் நகரையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கிய சுமார் 2000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை படிக்க: ஹார்வி புயல்: ஹூஸ்டனில் வெள்ளப்பேரழிவில் இருந்து 2000 பேர் மீட்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்