1965: ஒரு 'பயனற்ற' போரால் கிடைத்தது என்ன?

படத்தின் காப்புரிமை SHASTRI MEMORIAL

1966 ஜனவரி மூன்றாம் தேதி, இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிரதிநிதிக் குழுவினர் செல்வதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாகவே பாகிஸ்தான் அதிபர் அயூப் கானின் பிரதிநிதிக் குழு தாஷ்கண்ட் சென்றடைந்தது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு சமமான வாய்ப்புகளை வழங்கவேண்டும் என்று சோவியத் யூனியன் கடுமையான முயற்சிகளை எடுத்தது.

இரு தரப்பினரும் ஏறக்குறைய ஒரே மாதிரியான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

தாஷ்கண்டில் சோவியத் யூனியனின் பிரதமர் அலெக்சி கோசிகன் பல நாட்கள் தங்கியிருந்தார். ஏற்பாடுகள் அனைத்தையும் அவரே பார்த்துக் கொண்டார். அடுத்த நாள் இந்தியப் பிரதமரை சந்திக்கும்போது கைகுலுக்கமுடியாது என்று பாகிஸ்தான் அதிபர் தெரிவித்ததும் கோசிகினின் முதல் கவலை தொடங்கியது.

லால் பகதூர் சாஸ்திரியுடன் கைகுலுக்கும் புகைப்படம் பாகிஸ்தான் செய்தித்தாள்களில் வெளியானால் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அயூப் கான் அச்சப்பட்டார்.

கட்சில் இருந்து தாஷ்கண்ட் வரை (From kutch to Tashkant) என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஃபாரூக் பாஜ்வா பிபிசியிடம் கூறுகிறார், "அயூப் கானின் இந்த கருத்து கோசிகினுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்திய அரசை வழிநடத்தும் தலைமை பொறுப்பில் இருப்பவர் என்ற முறையில் சாஸ்திரிக்கும் முறையான மரியாதை வழங்கவேண்டும் என்று கண்டிப்பாக கூறிவிட்டார்.

கோசிகினுடைய கோபத்தை பார்த்த அயூப் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டார்.

கைதட்டாத பூட்டோ

ஜனவரி நான்காம் தேதியன்று சாஸ்திரியும் அயூப்கானும் சந்தித்தனர். அன்று, இவர்கள் இருவருடன் கோசிகினும் உரையாற்றினார். இந்திய பிரதமர் உரையாற்றிய பிறகு கைத்தட்டல் பலமாக இருந்தபோதிலும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஜுல்ஃபிகார் அலி பூட்டோ மட்டும் கைகளைத் தட்டாமல், கட்டிக் கொண்டிருந்தார்.

படத்தின் காப்புரிமை SHASTRI MEMORIAL

லால் பகதூர் சாஸ்திரி குறித்து புத்தகம் எழுதிய சி.பி ஸ்ரீவாஸ்தவ் சொல்கிறார், "தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் இருந்து விலகியிருக்க விரும்பிய பூட்டோவின் வெளிப்படையான செயல்பாடு இது.

கைதட்டச் சொல்லி அயூப் தனது முழங்கையால் பூட்டோவை இடித்து சமிக்ஞை செய்தார். ஜனவரி ஐந்தாம் தேதி பூட்டோவின் பிறந்தநாள் என்பதும் அந்த சூழ்நிலையில் தெரியவந்தது".

பாகிஸ்தானின் தகவல் தொடர்பு செயலாளர் அல்தாஃப் கெளஹர் அங்கு சிறிய அளவிலான பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் பூட்டோவின் கவனம் தாஷ்கண்டில் நடைபெற்ற முக்கியமான பேச்சுவார்த்தைகளில் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது.

படத்தின் காப்புரிமை L B MEMORIAL

முழு கூட்டத்திலும் அயூப் கான் மேலோட்டமாகவே பேசினார். விரிவான பேச்சுவார்த்தைக்கான பொறுப்பு பூட்டோவுக்கு வழங்கப்பட்டிருந்தது. பாகிஸ்தான் தரப்பில் இருந்து இருவேறு குரல்கள் எழும்பியதால் கோசிகினின் வேலை கடினமானது.

பூட்டோவின் கருத்துக்கள் பேச்சுவார்த்தையை சிக்கலாக்கும் போக்கிலேயே இருந்ததாக தனிப்பட்ட முறையில் பேசும்போது சோவியத் தலைவர் தெரிவித்தார். சி.பி ஸ்ரீவாஸ்தவ் தனது புத்தகத்தில் கூறுகிறார், "ஆங்கில மொழிப்புலமை கொண்ட பூட்டோ ஒப்பந்தத்தில் காமா போடுவதற்கும், சில இடங்களில் காமா இருக்கக்கூடாது என்பதற்கும் அதிக கவனம் கொடுத்தார். இதனால் சொல்லவந்த விஷயத்தின் பொருள் மாறிவிடும் சாத்தியங்கள் இருந்தது. பூட்டோவிடம் மிகவும் கவனமாக இருக்கவெண்டும் என்று கோசிகின் கருதினார்."

ஹாஜிபீர் குறித்து கோசினின் வாதம்

போரின்போது கைப்பற்றிய நிலப்பரப்பை திருப்பி ஒப்படைப்பது பற்றிய விவகாரம் பேச்சுவார்த்தையின் முதல் கட்டத்திலேயே எடுத்துக் கொள்ளப்பட்டது. சாஸ்திரி கோஸ்கினிடம் கூறினார், "பாகிஸ்தான் படையினர் எங்கள் நாட்டில் ஊடுருவதை தடுப்பதற்கான தற்காப்பு முயற்சியாக ஹாஜிபீரை நாங்கள் கைப்பற்ற வேண்டியது அவசியமானது. அங்கிருந்து நாங்கள் பின்வாங்கி சென்றுவிட்டால், எதிர்காலத்தில் பாகிஸ்தான் அந்த பகுதி வழியாக ஊடுருவல் நடவடிக்கைகளில் ஈடுபடாது என்பதற்கு என்ன உத்தரவாதம் கொடுக்கப்படும்? ஹாஜிபீரில் இருந்து நாங்கள் விலகுவதில் இருக்கும் சிக்கல்கள் பற்றி யோசிக்கவேண்டும். வேறு இடங்களில் இருந்து வெளியேறுவது குறித்து பேசலாம்."

படத்தின் காப்புரிமை Getty Images

இதற்கு பதிலளித்த கோசிகின், "ஹாஜிபீர் பற்றிய உங்கள் கவலைகளை புரிந்துக்கொள்கிறோம். ஆனால், அங்கிருந்து நீங்கள் விலகாவிட்டால், சம்ப் மற்றும் பிற பகுதிகளை கைப்பற்றியிருக்கும் பாகிஸ்தான் அங்கிருந்து வெளியேறாது. பிறகு நீங்கள் லாகூர் மற்றும் சியால்கோட் பகுதிகளில் இருந்து வெளியேறமாட்டீர்கள். அப்படியென்றால் எந்தவொரு உடன்பாட்டிற்கும் நாம் வரமுடியாது. நீங்களும் வெறும்கையுடனே திரும்பிப்போக நேரிடும். ஹாஜிபீரில் இருந்து விலகாவிட்டால் போருக்கான வாய்ப்புகள் நீடிக்கும். இந்த விலை கொடுத்தாவது இந்தியப் படையினர் அங்கு இருக்கவேண்டும் என்று விரும்புகிறீகளா?"

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பிரிவினை ஒரு இளஞ்ஜோடிகளின் காதலையும் பிரித்தது.

ஹாஜிபீர் விவகாரம் பற்றி சாஸ்திரி, இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் யஷ்வந்த் ராவ் செளஹானிடம் பேசினார். ஹாஜிபூரில் இருந்து விலகுவது பாதுகாப்பானது அல்ல என்றே அவரும் கருதினார். ஜனவரி ஏழாம் தேதியன்று சாஸ்திரிக்கும் அயூப் கானுக்கும் இடையே இருமுறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

ஆனால், குறுகிய நேரம் நடந்த அந்த சந்திப்புகளில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. அயூப் கானின் இலக்கு காஷ்மீராக இருந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் காஷ்மீர் விவகாரம் பற்றி விவாதிக்க இந்திய பிரதமர் சாஸ்திரி விரும்பவில்லை.

திடீரென சாஸ்திரியிடம் உருதுவில் பேசிய அயூப் கான், " நாட்டு மக்களிடம் நான் முகத்தை காண்பிக்கும் வகையில் காஷ்மீர் விவகாரத்தில் ஏதாவது செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

அயூபின் கோரிக்கைக்கு மிகுந்த பணிவுடன் ஆனால் உறுதியாக பதிலளித்த சாஸ்திரி, "மன்னிக்க வேண்டுகிறேன் அயூப் ஜி, இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு உதவமுடியாது" என்று கூறினார்.

கையால் எழுதப்பட்ட குறிப்பு

படத்தின் காப்புரிமை L B MEMORIAL

காஷ்மீர் தொடர்பாக சில சலுகைகளை வழங்கவேண்டும் என்று கோசிகின் விடுத்த கோரிக்கையை சாஸ்திரி ஏற்றுக் கொள்ளவில்லை. காஷ்மீர் பற்றி பேசுவதற்கு தாம் அயூபை மீண்டும் சந்திப்பதாக அவர் கூறிவிட்டார்.

சாஸ்திரியின் திடமான மறுப்பைப் பார்த்த கோசினின், அயூப்பிற்கு அழுத்தம் கொடுத்தார். இறுதியாக காஷ்மீர் பற்றிய விவாதத்தை அப்போதைக்கு விட்டுவிட அயூப் ஒப்புக் கொண்டு, இறுதியில் சாஸ்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பாகிஸ்தான் தரப்பினரால் ஒப்பந்தத்தின் வரைவு எழுதப்பட்டது, "ஐக்கிய நாடுகள் பட்டயத்தின் (Charter of the United Nations) கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்து பிரச்சினைகளும் சமாதானமாக தீர்க்கப்படும்." தட்டச்சு செய்யப்பட்ட இந்த வரைவு ஒப்பந்தத்தில் "ஆயுதங்களின் உதவியின்றி" என்பதை அயூப் கான் தனது கைப்பட எழுதவேண்டும் என்று சாஸ்திரி வலியுறுத்தினார்.

அயூப் கான் சாஸ்திரி கூறியவாறே செய்தார். "சாஸ்திரியின் அழுத்தத்திற்கு அயூப் அடிபணிந்தார் என்பதை சுட்டிக்காட்டவே அவரின் கைப்பட இந்த வார்த்தைகளை எழுத வைத்திருக்கலாம்" என்று பின்னர், தாஷ்கண்ட் ஒப்பந்தத்தின் ரகசிய குறிப்புகளை தனது உரையில் குறிப்பிடுகையில் பூட்டோ கூறினார்.

க்ரோமிகோவின் சீற்றம்

படத்தின் காப்புரிமை AFP

சோவியத் வெளியுறவு அமைச்சர் க்ராமிகோவிடம் பூட்டோ தொலைபேசியில் பேச விரும்புவதாக ஜனவரி 9 அன்று செய்திவந்தது.

இது பற்றி சி.பி ஸ்ரீவாத்சவ் புத்தகத்தில் எழுதியிருக்கிறார், "க்ரோமிகாவை தொலைபேசியில் தொடர்புகொண்ட பூட்டோ, இந்த ஒப்பந்தத்தில் இருந்து ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்ற வரிகளை நீக்கிவிட வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார்."

"இதைக் கேட்டு கோபத்தால் முகம் சிவந்த க்ரோமிகா, இது பற்றிய தனது ஒப்புதலை சற்று நேரம் முன்புதான் அயூப் கான் கூறினார், இப்போது பின்வாங்குவதற்கான நேரம் கடந்துவிட்டது, மீறி நீங்கள் அதை வலியுறுத்தினால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று அவர் எச்சரித்தார். க்ரோமிகாவின் கடுமையான நிலைப்பாட்டை பார்த்த பூட்டோ தனது கருத்தை மேலும் வலியுறுத்தவில்லை."

படத்தின் காப்புரிமை BBC WORLD SERVICE

இந்த ஒப்பந்தத்தை அரசியல்ரீதியாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்த பூட்டோ, அதை தாஷ்கண்ட்டிலேயே தொடங்கிவிட்டார். ஒப்பந்தம் இறுதியானபோது அனைவரும் கைதட்டியபோது, கைதட்டாமல் அமர்ந்திருந்தார் பூட்டோ. அயூப் கான் உரையாற்றியபோதும் தனது தலையை அசைத்து, தனக்கு அந்த ஒப்பந்தத்தில் விருப்பமில்லை என்பதை வெளிப்படுத்தினார் பூட்டோ.

இதன்பிறகு சில மணி நேரங்களுக்குள்ளேயே இந்திய பிரதமர் சாஸ்திரிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் இயற்கை எய்தினார்.

அன்று இரவு 9.45 மணிக்கு அயூப் கானை சாஸ்திரியை சந்தித்தபோது, "கடவுளே உன்னுடைய பாதுகாவலனாக இருக்கட்டும்" என்ற பொருள் கொண்ட 'குதா ஹாஃபிஸ்' என்று முகமன் கூறினார். சாஸ்திரியும் 'குதா ஹாஃபிஸ்' என்று மறுமொழி அளித்ததோடு, 'நல்லதே நடந்தது" என்று கூறினார். அதற்கு அயூப், "கடவுள் நன்மையையே செய்வார்" என்று பதிலளித்தார்.

டெல்லி கொண்டுவருவதற்காக சாஸ்திரியின் உடல், தாஷ்கண்ட் விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டபோது வழி நெடுகிலும் இருந்த சோவியத், இந்தியா மற்றும் பாகிஸ்தான் கொடிகள் அரைக் கம்பத்திற்கு இறக்கப்பட்டிருந்தன.

சாஸ்திரியின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டி வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டு விமானத்தில் ஏற்றப்படும்போது ஒருபுறம் சோவியத் பிரதமர் கோசிகின் கைகொடுத்தார். சாஸ்திரியின் பூதவுடலை சுமந்த பெட்டியின் மறுபுறத்தை சுமந்தார் அயூப் கான்.

பயனற்ற போர்

படத்தின் காப்புரிமை SHASTRI MEMORIAL
Image caption சாஸ்திரியின் உடல் இருந்த சவப்பெட்டியை தூக்கிச்செல்லும் கோசிகின் மற்றும் அயூப் கான்

ஒருவர் மீது மற்றொருவர் தீவிரமான எதிர்ப்பு நிலையை கொண்டிருந்த இருவர் பிறகு நண்பர்களாவதும், பிறகு விரைவிலேயே ஒருவர் இறந்துபோக, மற்றொருவரோ நண்பனாக மாறிய எதிரியின் மரணத்திற்கு சோகத்தை வெளிப்படுத்தி அவருடைய சவப்பெட்டியை சுமந்து செல்வதுமான உதாரணங்கள் மனித சரித்திரத்தில் காண்பதற்கு அரிது.

சாஸ்திரியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய சி.வி. ஸ்ரீவாஸ்தவ் எழுதுகிறார், சாஸ்திரின் மரணம் அயூப் கானுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியதை நான் நேரடியாக பார்த்தேன்.

சாஸ்திரின் சவப்பெட்டியை தூக்கிச் செல்லும் அயூப்கானின் படம் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது. இதைப் பார்த்த பாகிஸ்தான் மக்கள் ஆச்சரியமடைந்தனர்.

தாஷ்கண்ட் பிரகடனம் பாகிஸ்தானுக்கு அரசியல் ரீதியான தோல்வியே என்பதை காலப்போக்கில்தான் அயூப் கான் உணர்ந்தார். பாகிஸ்தான் காஷ்மீருக்காவே இந்தப் போரை தூண்டியது, நடத்தியது. ஆனால் தாஷ்கண்ட் பிரகடனத்தில் காஷ்மீர் பற்றி எதுவுமே இடம்பெறவில்லை என்பது பாகிஸ்தானுக்கு தோல்வி தானே? எனவே 1965 போர் பாகிஸ்தானுக்கு பயனற்று போய்விட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்