சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராஜினாமா

"முன்னர் நிகழ்ந்திராத நெருக்கடி" ஏற்பட்டுள்ளதை காரணங்காட்டி சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

ஆகஸ்ட் மாதம் முழு சாம்சங் குழுமத்திற்குமான வாரிசு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், அந்த நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய திடீர் நிர்வாக மாற்றம் இதுவாகும்.

சாம்சங் எலக்ட்ரானிக்ஸின் மூன்று இணை தலைமை நிர்வாக அதிகாரிகளில் க்வான் ஓ ஹ்யூன் ஒருவர்.

நினைவக சில்லுகளின் அதிக விலை காரணமாக, இந்த நிறுவனம் காலாண்டில் அதிக லாப எதிர்பார்ப்பை செய்துள்ள அதே நாள் அவருடைய ராஜினாமாவும் வந்துள்ளது.

தன்னுடைய பதவியில் இருந்து விலகுவது பற்றி நீண்ட நாட்களாக சிந்தித்து வந்ததாகவும், இதற்கு மேலும் அதனை தள்ளிப்போட முடியாது என்றும் இந்த நிறுவனத்தின் நிர்வாக குழுவிலும் இருக்கும் க்வான் தெரிவித்திருக்கிறார்.

"முன்னெப்போதும் ஏற்படாத நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம். இந்த நிறுவனம் புதிய தொடக்கம் காண வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று நம்புகிறேன். தகவல் தொடர்பு தொழில்துறை மிக விரைவாக மாறி வருவதால் தோன்றுகின்ற சவால்களுக்கு சிறந்த முறையில் பதிலளிப்பதற்கு இளம் தலைமை அவசியம்" என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அவர் சாம்சங் எலக்ட்ரானிக்ஸின் நிர்வாக குழுவில் இருப்பார்.

படத்தின் காப்புரிமை Getty Images

"சாம்சங் நிறுவனம் தலைமை, நெருக்கடியில் உள்ளது" என்று சிங்கப்பூர் தொழில்நுட்ப கன்சல்டென்ஸி நிறுவனமான 'க்யூஇடி'-வின் கூட்டு நிறுவனர் ரயன் லிம் தெரிவித்திருக்கிறார்.

"தற்போதைய நிர்வாக அமைப்பு தெளிவு படுத்துவதற்கு பதிலாக குழப்புகின்ற சிக்கலான வலையாக தோன்றுகிறது" என்று லிம் தெரிவித்துள்ளார்.

இந்த விமர்சனத்திற்கு பிபிசியிடம் பேசிய சாம்சங் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், அடுத்த தலைமை நிர்வாக அதிகாரி கூடிய விரைவில் நியமிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு அவர் கால வரையறை எதையும் வழங்கவில்லை.

ஊழல் குற்றச்சாட்டுகள்

ஒன்றோடு ஒன்று தொடர்புடைய 60 நிறுவனங்களை கொண்டுள்ள சாம்சங் குழுமம் என்ற கிரீடத்தில் இருக்கும் அணிகலனான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் கருதப்படுகிறது.

'செபோல்ஸ்' என்று அறியப்படும் தென் கொரியாவில் குடும்ப உறுப்பினர்களால் நடத்தப்படும் பெரிய வர்த்தகங்களில் ஒன்று இதுவாகும்.

'நம்பகத்தன்மை நெருக்கடியில்' சாம்சங் நிறுவனம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
'நம்பகத்தன்மை நெருக்கடியில்' சாம்சங் நிறுவனம்

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த குழுமத்தின் வாரிசு லீ ஜெ-யோங், லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.

அரசியல் ஆதாயங்களை பிரதிபலனான பெறுவதற்கு, தென் கொரியாவின் முன்னாள் அதிபர் பார்க் குன்-ஹெயின் நெருங்கிய தோழியான சோய் சூன்-சில் நடத்திய அறக்கட்டளைகளுக்கு 36 மில்லியன் டாலர் நன்கொடைகள் வழங்கியதாக லீ குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

தன்னுடைய சிறை தண்டனை தொடர்பாக மேல்முறையீட்டு வழக்கில் வியாழக்கிழமை அவர் மீண்டும் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.

இருப்பினும், தலைமையில் இருக்கும் குழப்பங்கள் சாம்சங் நிறுவனத்தின் அடிமட்ட நிலையை இன்னும் அடைந்ததாக தோன்றவில்லை.

வட்டவடிவ ஓடுபாதையில் விமானம் 'டேக் ஆஃப்' ஆகுமா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
'டேக் ஆப்'

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்